இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள 20 பேர் கொண்ட அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வுக் குழு நேற்று அறிவித்தது.
இந்தியாவிற்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணியை தசுன் ஷனகா கேப்டனாக வழிநடத்த இருக்கிறார். அதே சமயம் ஆல்-ரவுண்டர் வனிந்து ஹசரங்க டி20 போட்டிக்கு துணை கேப்டனாகவும், ஒருநாள் போட்டிக்கு குசல் மெண்டிஸ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அணி முழு விவரம்:
அணி
- தசுன் ஷனகா – கேப்டன்
- பாத்தும் நிஸ்ஸங்க
- அவிஷ்க பெர்னாண்டோ
- சதீர சமரவிக்ரம
- குசல் மெண்டிஸ் - ஒருநாள் போட்டிகளுக்கான துணை கேப்டன்
- பானுகா ராஜபக்ச - டி20 போட்டிகளுக்கு மட்டும்
- சரித் அசலங்கா
- தனஞ்சய டி சில்வா
- வனிந்து ஹசரங்க - டி20 போட்டிகளுக்கான துணை கேப்டன்
- அஷேன் பண்டார
- மகேஷ் தீக்ஷனா
- ஜெஃப்ரி வாண்டர்சே - ஒருநாள் போட்டிகளுக்கு மட்டும்
- சாமிக்க கருணாரத்ன
- தில்ஷான் மதுஷங்க
- கசுன் ராஜித
- நுவனிது பெர்னாண்டோ- ஒருநாள் போட்டிகளுக்கு மட்டும்
- துனித் வெல்லலகே
- பிரமோத் மதுஷன்
- லஹிரு குமார
- நுவான் துஷாரா - டி20 போட்டிகளுக்கு மட்டும்
கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய தனஞ்சய லக்ஷான், அசித்த பெர்னாண்டோ மற்றும் தினேஷ் சண்டிமால் ஆகிய மூன்று வீரர்கள் இடம் பெறவில்லை. சமீபத்தில் முடிவடைந்த லங்கா பிரீமியர் லீக்கில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் மூன்றாவது இடத்தை தினேஷ் சண்டிமால் பிடித்தார். இருப்பினும், அவர் அணியில் இடம்பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
லங்கா பிரீமியர் லீக் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் நுவனிது பெர்னாண்டோ முதல் முறையாக ஒருநாள் போட்டிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவிஷ்க பெர்னாண்டோ குணமடைந்து மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இலங்கை டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார்.
இலங்கை ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப். யாதவ், அக்சர் படேல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.