தென்னாப்பிரிக்காவில் ஜனவரி மாதம் தொடங்கும் முத்தரப்புத் தொடர் மற்றும் 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை:
ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரானது வருகின்ற 2023 பிப்ரவரி 10 ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி ப்ரவரி 12 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக கேப்டவுனில் களமிறங்குகிறது. இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளுடன் இந்திய அணி குரூப் 2 இல் இடம்பெற்றுள்ளது.
லீக் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் விளையாடும். இறுதிப் போட்டியானது வருகின்ற பிப்ரவரி 26 அன்று கேப்டவுனில் நடைபெற இருக்கிறது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை இந்திய அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்) ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ரேணுகா தாக்கூர், அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கயக்வாட், ஷிகா பாண்டே
காத்திருப்பு வீரர்கள் : சப்பினேனி மேகனா, சினே ராணா, மேக்னா சிங்
| ஐசிசி டி20 உலகக் கோப்பை 2023 – இந்தியாவின் லீக் போட்டிகள் | |||
| சர். எண். | தேதி | எதிர்ப்பாளர் | இடம் |
| 1 | பிப்ரவரி - 12 | பாகிஸ்தான் | கேப்டவுன் |
| 2 | பிப்ரவரி - 15 | மேற்கிந்திய தீவுகள் | கேப்டவுன் |
| 3 | பிப்ரவரி - 18 | இங்கிலாந்து | போர்ட் எலிசபெத் |
| 4 | பிப்ரவரி - 20 | அயர்லாந்து | போர்ட் எலிசபெத் |
டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஜனவரி 19 ம் தேதி முதல் தொடரில் விளையாட இருக்கிறது.
முத்தரப்பு தொடருக்கான இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, தேவிகா வைத்யா, ராஜேஸ்வரி கயக்வாட், ராதா யாதவ், ரேணுகா சிங், மேகனா சிங், அஞ்சலி சர்வானி, சுஷ்மா வர்மா (விக்கெட் கீப்பர்), அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரகர், சபினேனி மேகனா, சினே ராணா, ஷிகா பாண்டே
| T20I முத்தரப்பு தொடர் - Ind W vs SA W vs WI W தென் ஆப்பிரிக்கா, 2023 | ||||
| எஸ். எண் | தேதி | போட்டி எண். | பொருத்துக | இடம் |
| 1 | ஜனவரி - 19 | 1 | தென்னாப்பிரிக்கா W vs இந்தியா W | பஃப்பல்லோ பூங்கா, கிழக்கு லண்டன் |
| 2 | ஜனவரி- 21 | 2 | தென்னாப்பிரிக்கா W vs வெஸ்ட் இண்டீஸ் W | பஃப்பல்லோ பூங்கா, கிழக்கு லண்டன் |
| 3 | ஜனவரி- 23 | 3 | இந்தியா W vs வெஸ்ட் இண்டீஸ் W | பஃப்பல்லோ பூங்கா, கிழக்கு லண்டன் |
| 4 | ஜனவரி - 25 | 4 | தென்னாப்பிரிக்கா W vs வெஸ்ட் இண்டீஸ் W | பஃப்பல்லோ பூங்கா, கிழக்கு லண்டன் |
| 5 | ஜனவரி- 28 | 5 | தென்னாப்பிரிக்கா W vs இந்தியா W | பஃப்பல்லோ பூங்கா, கிழக்கு லண்டன் |
| 6 | ஜனவரி-30 | 6 | வெஸ்ட் இண்டீஸ் டபிள்யூ எதிராக இந்தியா டபிள்யூ | பஃப்பல்லோ பூங்கா, கிழக்கு லண்டன் |
| 7 | பிப்ரவரி - 2 | இறுதி | முத்தரப்புத் தொடரின் இறுதிப் போட்டி | பஃப்பல்லோ பூங்கா, கிழக்கு லண்டன் |