இலங்கை அணிக்காக தனது 100-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியினை எதிர்த்து விளையாடுகிறார் ஏஞ்சலோ மேத்யூஸ். 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆறாவது இலங்கை வீரர்ரும் நேத்யூஸ் தான். 


இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அரசியல் மாற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு மத்தியிலும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட்  அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்கனவே இலங்கை அணி தோல்வியைத் தழுவியது. இன்று (ஜூலை 24) இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நடந்து வருகிறது. இதில் விளையாடும் ஏஞ்சலோ மேத்யூஸுக்கு இந்த போட்டி 100வது டெஸ்ட் போட்டியாகும். இலங்கை அணிக்காக 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆறாவது வீரர் இவர் தான். சர்வதேச அளவில் 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 70வது வீரர் இவர் தான். இதற்கு முன்னர் இலங்கை அணிக்காக ஜெயவர்தனே, முத்தய்யா முரளிதரன், வாஸ், ஜெயசூர்யா, சங்ககரா ஆகியோர் 100 டெஸ்ட் போடிகளுக்கு மேல் விளையாடி உள்ளனர். 






ஆல் ரவுண்டரான ஏஞ்சலோ மேத்யூஸ் இதுவரை, 218 சர்வதேச  ஒருநாள் போட்டியிலும், 99 டெஸ்ட் போட்டியிலும், 78 டி20 போடியிலும் விளையாடி உள்ளார். இதில், ஒருநாள் போட்டியில் 5,835 ரன்களும், டெஸ்ட் போட்டியில் 6,876 ரன்களும் டி20யில் 1,178 ரன்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலங்கை அணி தொடர்ந்து தடுமாறி வந்த காலகட்டத்தில் அணியின் கேப்டனாகவும் அணியினை வழிநடத்தியுள்ளார்.  100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இவருக்கு அணி நிர்வாகத்தின் சார்பில், இலங்கை கிரிக்கெட் கவுன்சிலின் துணை ஆணையர் ஜெயந்தா தர்மதாசா மற்றும் அணியின் முன்னாள் வீரர் சம்மிண்டா வாஸ் ஆகியோர் இணைந்து நினைவு பரிசையும் வழங்கினர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண