இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். இவர் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் விளையாடியபோது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகாரில் சிக்கினார். இதையடுத்து, அவர் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில்தான் அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்பட்டது.




இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் கேரள அணிக்காக விளையாட ஸ்ரீசாந்திற்கு வாய்ப்பு கிடைத்தது.  இதையடுத்து, கேரள அணிக்கும் மேகலாயா அணிக்கும் இடையே நடைபெற்ற ரஞ்சி போட்டியில் ஸ்ரீசாந்த் விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளார். 9 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் விளையாடும் ஸ்ரீசாந்த் விக்கெட் கைப்பற்றியதை ஆரவாரமாக கொண்டாடினர். மேலும், இந்த விக்கெட்டை கைப்பற்றிய பிறகு மைதானத்தை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 






இதுதொடர்பாக, ஸ்ரீசாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ 9 ஆண்டுகளுக்கு பிறகு முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளேன். கடவுளின் கருணையால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இந்த விக்கெட்டிற்காக எனது மூச்சையும் கொடுக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.




39 வயதான ஸ்ரீசாந்த் தற்போது கேரள அணிக்காக ஆடியபோது மேகலாயாவின் ஆர்யன் போராவை ஆட்டமிழக்கச் செய்தார். ஸ்ரீசாந்த் இந்திய அணி உலககோப்பையை வென்ற 2007ம் ஆண்டு மற்றும் 2011ம் ஆண்டு அணியில் இடம்பிடித்திருந்தார். ஸ்ரீசாந்த் இதுவரை 27 டெஸ்ட் போட்டியில் ஆடி 87 விக்கெட்டுகளையும், 53 ஒருநாள் போட்டிகளில் ஆடி 75 விக்கெட்டுகளையும், 10 டி20 போட்டிகளில் ஆடி 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 44 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 40 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.


மேலும் படிக்க : Kohli 100th Test: 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன்னு நினைக்கல.. கடவுள் கருணை காட்றார்.. - விராட்கோலி


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண