இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 


இந்த ஆண்டு தொடக்கத்தில் சவுரவ் கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த கங்குலிக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது உறுபட்டபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவருக்கு அஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு அவர் குணமாகி வீடு திரும்பினார். தொடர்ந்து 20 நாட்களுக்கு பிறகு, ஜனவரி 28ஆம் தேதி மீண்டும் கங்குலிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு இரண்டாவது முறை ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது இரண்டு தமனிகளில் இரண்டு ஸ்டென்ட்கள் வைக்கப்பட்டன.


இதையடுத்து கங்குலி தனது அன்றாட வேலைகளை செய்யத்தொடங்கினார். மேலும், கொரோனா தடுப்பூசியையும் கங்குலி முழுமையாக செலுத்திக்கொண்டார். 






இந்நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 


Sourav Ganguly| மனைவியும் கேர்ள் ஃப்ரெண்டும்.. பெரும் சர்ச்சையில் சிக்கிய கங்குலி..!


அவர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டாரா இல்லையா என்பதைக் கண்டறிய அவரது இரத்த மாதிரிகள் மரபணு வரிசைமுறைக்கு அனுப்பப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். “அவர் நேற்று இரவு உட்லண்ட்ஸ் நர்சிங் ஹோமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு மருந்து கொடுக்கப்பட்டு தற்போது உடல்நிலை சீராக உள்ளது" என்று பிசிசிஐ வட்டாரம் கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.


‛மற்றவர்களின் வேதனையில் இன்பம் காணாதீர்’ - ப.சிதம்பரத்துக்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர்!


இந்த வருடத்தில் கங்குலி இதோடு மூன்றாவது முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


சமீபத்தில் விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது குறித்த விவகாரத்தில் கங்குலி பெரிதும் விமர்சனத்திற்குள்ளானர். விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தபோது பிசிசிஐ அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கங்குலி தெரிவித்தார். ஆனால் ஒரு பேட்டியின் போது விராட் கோலி கங்குலியின் கூற்றை முற்றிலுமாக மறுத்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண