ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 2- 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்பேர்னில் நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன் அடிப்படையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 


  தொடர்ந்து, முதலாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இரண்டாவது நாளான நேற்று 267 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக வார்னர் 38 ரன்கள் பெற்றிந்தார். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.


இங்கிலாந்து அணி தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியதில் இருந்து விக்கெட்கள் சரிந்தது. 46 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியநிலையில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் அணியை மீட்க போராடினார்.


 






7 விக்கெட்டிற்கு களமிறங்கிய ஸ்டோக்ஸ் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டார்க் பந்துவீச்சில் கிளீன் போல்டனார். அவரை தொடர்ந்து ரூட் 28 ரன்களில் வெளியேற, பின்னால் களமிறங்கிய வீரர்களும் தங்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர். இங்கிலாந்து அணி 27.4 ஓவர்களில் 68 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 14 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றி பெற்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 


 






ஆஸ்திரேலியா அணி வீரர் ஸ்காட் போலந்து அறிமுக போட்டிலேயே 6 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண