டி20 உலகக் கோப்பை தொடர் கடந்த 18-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றது. அதிலிருந்து ஸ்காட்லாந்து, நமீபியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறினர். இதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தற்போது வரை டி20 உலகக் கோப்பையில் நடைபெற்ற சூப்பர் 12 போட்டிகளில் பிடிக்கப்பட்ட சிறப்பான கேட்ச்கள் என்னென்ன?
ஏய்டன் மார்கர்ம்:
தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற சூப்பர் 12 போட்டி நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அடித்த பந்தை தென்னாப்பிரிக்க வீரர் ஏய்டன் மார்கர்ம் லாவகமாக பிடித்து அசத்தினார்.
ஹோசைன்:
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக சூப்பர் 12 போட்டி நடைபெற்றது. அதில் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டன் அடித்த பந்தை பந்துவீசிய ஹோசைன் சிறப்பாக டைவ் அடித்து பிடித்தார். இந்த கேட்ச் மிகவும் சிறப்பானதாக அமைந்தது.
ஹெர்ட்மேயர்:
தென்னாப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக களமிறங்கியது. அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் ஹெண்ட்ரிக்ஸ் அடித்த பந்தை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெர்ட்மேயர் சிறப்பாக கேட்ச் பிடித்தார். முன்னாடி ஓடி வந்து தரையில் படப் போகும் பந்தை அவர் லாவகமாக பிடித்து அசத்தினார்.
முகமது ஷேசாத்:
ஆஃப்கானிஸ்தான்-ஸ்காட்லாந்து அணிகளுக்கு எதிரான சூப்பர் 12 போட்டி நடைபெற்றது. அதில் ஆஃப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ஷேசாத் பந்தை லாவகமாக டைவ் செய்து மேட் க்ராஸை அவுட்டாக்கினார். 34 வயதில் ஒரு விக்கெட் கீப்பர் சிறப்பாக இந்த கேட்சை பிடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
டேவான் கான்வே:
பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 போட்டி நேற்று நடைபெற்றது. அதில் நியூசிலாந்து வீரர் டேவான் கான்வே பாகிஸ்தானின் ஹஃபீஸ் அடித்த பந்தை லாவகமாக டைவ் அடித்து பிடித்தார். இந்த கேட்சு பார்ப்பதற்கு மிகவும் சிறப்பானதாக அமைந்தது.
மேலும் படிக்க: அடேய் அப்பரசண்டிகளா.. மிஸ்ஃபீல்டுல ஓடாதிங்கன்னு எத்தன வாட்டி சொல்றது? செம்ம சிரிப்பை உண்டாக்கிய ரன் - அவுட்