பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வீராங்கனைகள் என்ற சாதனையை ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஜோடி படைத்திருக்கிறது.


இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்:


தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஒரே ஒரு டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஜூன் 28) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்தவகையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினார்கள். 


அதிரடியான பார்ட்னர்ஷிப்:


இருவரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தங்களது அதிரடியா ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதன்படி ஸ்மிரிதி மந்தனா 122 பந்துகளில் 100 ரன்கள் குவித்து தன்னுடைய சதத்தை பதிவு செய்தார். அதேபோல் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷபாலி வர்மா 113 பந்துகளில் 102 ரன்கள் குவித்து டெஸ்ட் போட்டியில் தன்னுடைய சதத்தை பதிவு செய்தார். அதிரடியாக விளையாடிய இவர்களது பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளர்கள் திணறினார்கள்.






 


வரலாற்று சாதனை:


இதனிடையே இந்தியா 292 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ஸ்மிரிதி மந்தனா 161 பந்தில் 149 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதற்கு முன்னதாக பெண்கள் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டுக்கு 250 ரன்களுக்கு மேல் அடித்தது கிடையாது. தற்போது 292 ரன்கள் விளாசி மந்தனா- ஷபாலி வர்மா ஜோடி அதிக ரன்கள் விளாசி சாதனை படைத்துள்ளனர். அதேபோல் ஷபாலி வர்மா 197 பந்துகள் களத்தில் நின்று இரட்டைச் சதத்தை பதிவு செய்தார். மொத்தம் அவர் 205 ரன்கள் குவித்தார். தற்போது 415 ரன்களை கடந்து இந்திய அணி விளையாடி வருகிறது.


மேலும் படிக்க: Rohit Sharma: ஐசிசி தொடர்களில் 3 போட்டிகளில் தான் தோல்வி - ஆனால் 3 கோப்பைகளை இழந்த ரோகித் சர்மா..!


 


மேலும் படிக்க:Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ