மேற்கிந்திய தீவுகளுக்கு அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி 187 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. முதலில் டாஸ் வென்ற ஸ்ரீலங்கா அணியின் கேப்டன் கருணாரத்னே பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கருணாரத்னே மற்றும் நிசான்கா களமிறங்கினர். 



இருவரும் தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். கேப்டன் கருணரத்னே 147 ரன்னும், டி சில்வா 61 ரன்னும், நிசங்கா 56 ரன்கள் அடித்து அசத்த முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகளும், வாரிகன் 3  விக்கெட்டுகளும், காப்ரியல் 2  விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 


அதனைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மாயேர்ஸ் 45 ரன்களும், கேப்டன் பாரத்வைட் 41 ரன்களும் எடுத்து இருந்தனர். 



இலங்கை அணி சார்பில் ஜெயாவிக்ரமா 4 விக்கெட்டுகளும், ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளும், லக்மல், டி சில்வா மற்றும் எம்புல்டினியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்களும் எடுத்து இருந்தனர். 


2 வது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே 83 ரன்கள் அடித்து அவுட் ஆக, மாத்யூஸ் 69 ரன்களுடனும், சண்டிமால் 10 ரன்களுடனும் அவுட்டாகாமல் கடைசி வரை களத்தில் இருந்தனர்.  இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 40.5 வது ஓவரில் 191 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. 



357 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க தொடங்கியது. ஓரளவு தாக்குப்பிடித்த போனர் 68 ரன்களுடன் அவுட் ஆகாமல் கடைசி வரை நிற்க, அவருடன் டா செல்வா 54 ரன்கள் அடித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் ரன் எண்ணிகையை உயர்த்தினர். இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 79 ஓவர்களில் 160 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இலங்கை அணி 187 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1- 0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது. 


இரு இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடிய இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண