ஆஸ்திரேலியாவில் அடுத்தாண்டு உலககோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக உலகின் முன்னணி கிரிக்கெட் அணிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், நடப்பு உலககோப்பை போட்டித் தொடரை நடத்த உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் உலககோப்பையில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது.
ஆரோன் பிஞ்ச் தலைமையில் ஆஸ்திரேலிய அணி உலககோப்பையில் பங்கேற்க உள்ளது. ஆஸ்திரேலிய அணியில் ஐ.பி.எல். கோப்பையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அசத்திய டிம் டேவிட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டிம் டேவிட் அடிப்படையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்தவர்.
கடந்த ஒரு ஆண்டாக டி20 கிரிக்கெட் போட்டிகளில் பலராலும் உன்னிப்பாக கவனிக்கப்படும் வீரராக டிம் டேவிட் உள்ளார். டிம் டேவிட் சிங்கப்பூரில் பிறந்தவர். 27 வயதான டிம் டேவிட் கடந்த 2019ம் ஆண்டு சிங்கப்பூர் அணிக்காக கத்தார் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார்.
டி20 போட்டிகளில் அதிரடி காட்டிய டிம் டேவிட் பல நாட்டு அணிகளின ஏலத்தில் முக்கிய வீரராக வலம் வந்தார். அவ்வாறு ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஸ் டி20 கிரிக்கெட் தொடரில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிக்காக ஆடியுள்ளார். ஆஸ்திரேலியாவில் கடந்த சில ஆண்டுகளாக தங்கி குடியுரிமை பெற்ற டிம் டேவிட் மேற்கு ஆஸ்திரேலிய அணிக்காகவும், மேற்கு ஆஸ்திரேலிய அணிக்காகவும் ஆடியுள்ளார்.
மேலும் படிக்க : Asia Cup : கடைசி ஓவரில் திரில் வெற்றி..! சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இலங்கை..! தொடரை விட்டு வெளியேறிய வங்கதேசம்..!
டிம் டேவிட் கடந்த ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணிக்காக 8.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர். டிம் டேவிட் இதுவரை மொத்தமாக 122 டி20 போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 640 ரன்களை விளாசியுள்ளார். அதிகபட்சமாக 92 ரன்களை எடுத்துள்ள டிம் டேவிட், 11 அரைசதங்களை விளாசியுள்ளார். டிம் டேவிட் சிங்கப்பூர் அணிக்காக மட்டும் 14 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.
ஆரோன் பிஞ்ச் தலைமையில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஜோஸ் இங்லீஸ்( விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் ( விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ஆஸ்டன் அகர், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஹேசில்வுட், ரிச்சர்ட்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க : மஞ்சள் சட்டையில் மீண்டும் சிங்கமாய் 'டு பிளெசிஸ்'! தெ.ஆப்பிரிக்காவில் கலக்கவிருக்கும் சிஎஸ்கே!
மேலும் படிக்க : Watch video : ''நீங்கதான் ரோல் மாடல்''.. ரோகித், கோலியிடம் அன்பை பரிமாறிக் கொண்ட ஹாங்காங் டீம்!