ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிந்த பிறகு, இந்திய கேப்டன் சுப்மான் கில், இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா குறித்து ஒரு முக்கியமான கருத்தை தெரிவித்தார்.

Continues below advertisement


ஹர்சித் ராணா:


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஹர்ஷித் ராணா சிறப்பாக பந்துவீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் கவர்ந்தார்.அடிலெய்டில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஹர்ஷித் ராணாவின் 24 ரன்கள் அவரால் இறுதிக்கட்டத்தில் ரன்களை எடுக்கும் முடியும் என்கிற நம்பிக்கையை இந்திய அணிக்கு கொடுத்தது.


இந்திய அணியில் அவரது தேர்வு குறித்து ஏகப்பட்ட கேள்விகள் மற்றும் சர்ச்சைகள் இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பிரகாசித்தார்.



நேற்றைய போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கில், “


"எங்களைப் பொறுத்தவரை, 8வது இடத்தில் இருக்கும் ஒரு பேட்ஸ்மேன் 20–25 ரன்கள் சேர்க்க முடிந்தால், அது மிக முக்கியமான நிலையாக மாறும். ஹர்ஷித் அதைச் செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். உயரமான மற்றும் தொடர்ந்து மணிக்கு 140 கிமீ வேகத்தில் பந்து வீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகம் இல்லை. தென்னாப்பிரிக்கா போன்ற ஆடுகளங்களில், அத்தகைய வீரர்கள் மிகவும் மதிப்புமிக்கவர்கள்."


2027 வது உலகக்கோப்பை: 


2027 கிரிக்கெட் உலகக் கோப்பை முதன்மையாக நடைபெறும் தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் ஹர்ஷித் ராணாவின் பந்துவீச்சு மிக முக்கியமானதாக இருக்கும் என்று கில் கூறினார். உயரமான மற்றும் 140 கிமீ வேகத்திற்கு மேல் வேகத்தை உருவாக்கக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் அத்தகைய சூழ்நிலைகளில் நல்ல தாக்கத்தை ஏற்ப்படுத்துவார்கள் , ஏனெனில் பவுன்ஸ் மற்றும் வேகம் அங்கு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது என்று இந்திய கேப்டன் கில் குறிப்பிட்டார்


." மேலும் மிடில் ஓவர்களில் பந்து அதிகம் நகராது, எனவே வேகமும் நல்ல நீளமும் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன. எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் அழுத்தத்தை உருவாக்கினர், மேலும் ராணா அதை அழகாகப் பயன்படுத்திக் கொண்டார்," என்று கில்  கூறினார்.