Rohit Kohli ODI: இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக விளையாட உள்ள ஒருநாள் தொடர்களுக்கான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மாஸ் காட்டிய ரோகித் - கோலி கூட்டணி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களும், நட்சத்திர ஆட்டக்காரர்களுமான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இதனால் இந்திய அணி பங்கேற்கும் அந்த போட்டிகளுக்கான டிஆர்பி ஆனது கடும் வீழ்ச்சி கண்டனது. அதேநேரம், 7 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் களம் கண்ட, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கேற்ரார் போலவே ரோகித் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் விளாசி தொடர்நாயகன் விருதை வென்று அசத்தினார். கோலி முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பினாலும், கடைசி போட்டியில் அரைசதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார். இதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துள்ளனர். தொடர்ந்து, ரசிகர்கள் எதிர்பார்க்கும் ரோகித் - கோலி ஜோடி மீண்டும் எப்போது சர்வதேச போட்டியில் களமிறங்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தியா Vs தென்னாப்ரிக்கா ஒருநாள் தொடர்:
ஆஸ்திரேலிய தொடரை அடுத்து நவம்பர் மாதம் இறுதியில் தொடங்க உள்ள தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான, ஒருநாள் தொடரில் தான் அடுத்ததாக ரோகித் மற்றும் கோலி கூட்டணி களமிறங்க உள்ளது. உள்ளூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் தென்னாப்ரிக்கா, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. அதன்படி,
- இந்தியா Vs தென்னாப்ரிக்கா - நவ.30, ராஞ்சி
- இந்தியா Vs தென்னாப்ரிக்கா - டிச.3, நியூ ராய்பூர்
- இந்தியா Vs தென்னாப்ரிக்கா - டிச.6, விசாகப்பட்டினம்
உள்ளூர் போட்டிகளில் ரோகித், கோலி:
தென்னாப்ரிக்கா தொடருக்கு பிறகு ஜனவரி 11ம் தேதி வரை, இந்திய அணிக்கு எந்தவொரு ஒருநாள் போட்டிகளும் அட்டவணையில் இல்லை. அதன்படி சுமார் 6 வாரங்கள் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. அந்த நேரத்தில் தங்களது உடல்தகுதியை உறுதிப்படுத்த கோலி மற்றும் ரோகித் ஆகிய இருவருமே, உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே கோப்பையில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. குறைந்தபட்சம் 2 முதல் 3 போட்டிகளில் இருவரும் விளையாட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா Vs தென்னாப்ரிக்கா ஒருநாள் தொடர்:
விஜய் ஹசாரே கோப்பையை தொடர்ந்து, அடுத்த ஆண்டு நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் மற்றும் கோலி கூட்டணி களமிறங்க உள்ளது. உள்ளூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நியூசிலாந்து, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. அதன்படி,
- இந்தியா Vs நியூசிலாந்து - ஜன.11, வதோத்ரா
- இந்தியா Vs நியூசிலாந்து - ஜன.14, ராஜ்கோட்
- இந்தியா Vs நியூசிலாந்து - ஜன.18, இந்தூர்
2027 உலகக் கோப்பையில் கோலி, ரோகித்?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ரோகித் - கோலி ஜோடி நிலைத்து நின்று ஆடி, இறுதி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பெற செய்தது. இதனால் ஒருநாள் போட்ட்டியில் மட்டும் எப்படி விளையாட முடியும்? சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து விளையாடாமால் உலகக் கோப்பையில் பங்கேற்பது என்பது சந்தேகம்? கோலி - ரோகித்தின் காலம் முடிந்துவிட்டது.. என எழுந்த பல்வேறு விமர்சனங்களுக்கும் இருவரும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். அதோடு, 2027ம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாட தீர்க்கமாக இருப்பதையும், நேற்றைய ஆட்டத்தின் மூலம் மீண்டும் இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர். அதோடு இந்திய அணி சார்ந்த வணிகம் மற்றும் டிஆர்பிக்கு, ரோகித் மற்றும் கோலி எவ்வளவு அவசியம் என்பதையும் ஆஸ்திரேலிய தொடர் உணர்த்தியுள்ளது.