இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு 5 போட்டிகளில் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின்  முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.


கில் காயம்:


பெர்த் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடந்த பயிற்சி ஆட்டத்தில் பீல்டிங் செய்த போது இந்திய வீரர் சுப்மன் கில்லுக்கு அவரது இடது கை கட்டை விரலில் காயம் ஏற்ப்பட்டது. இதன் காரணமாக அவரால் முதலாவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க முடியாத சூழல்நிலை உருவானது. அந்த போட்டியில் பிளேயிங் லெவனில் சுப்மன் கில்லுக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.






இரண்டாவது டெஸ்ட்: 


இந்த நிலையில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைப்பெற உள்ளது. இதற்காக இந்திய அணி நாளை மறுநாள் ( நவம்பர் 30) தேதி ) கான்பெராவில் இன்று நாள் பிங்க் நிறப்பந்து பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் அணியுடன் விளையாட உள்ளது. காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் கில் இந்த பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதையும் படிங்க: Rishabh Pant Salary : ஏலத்தில் 27 கோடி! ஆனால் கைக்கு இவ்வளவு தான் வருமா? பண்ட்டின் முழு சம்பள விவரம்


கில்லுக்கு ஏற்ப்பட்ட காயம் குணமாக 10-14 நாட்கள் வரை எடுக்கும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது
ஆனால் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு மிக முக்கியமான ஒன்றாக இந்த பயிற்சி ஆட்டம் இந்திய அணிக்கு இருக்கும். ஆனால் கில் இதில் கலந்து கொள்ளாமல் நேரடியாக விளையாடினால் பிங்க் நிற பந்தை எப்படி எதிர்கொள்வார் என்று கேள்வியும் உள்ளது. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கில் விளையாடுவது சற்று கடினம் தான் என்று கூறப்படுகிறது.


ராகுலின் இடம்:


முதலாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்காத நிலையில் ராகுல் ஜெய்ஸ்வாலுடன் தொடக்க ஆட்டக்காராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது கேப்டன் ரோகித் சர்மா அணியில் திரும்பியுள்ளதால் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வாலுடன் தொடக்க வீரராக களமிறங்குவார்


ஒரு வேளை கில் இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை என்றால் 3வது வீரராக கே.எல் ராகுல் களமிறங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.