இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில், இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.
களமிறங்கியது முதல் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய சுப்மன் கில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த ஒருநாள் போட்டியிலும் 87 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். கடந்த இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் சுப்மன் கில் 116 ரன்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும், சர்வதேச அளவில் இரண்டாவது வீரர் என்ற பெருமையும் சுப்மன் கில் படைத்தார். கில் அதிவேகமாக 1000 ரன்களை 19 இன்னிங்கிஸில் அடித்தார். இதற்கு முன் விராட் கோலியும், ஷிகர் தவானும் 24 இன்னிங்சில் 1000 ரன்களை எட்டினர்.
முன்னதாக, பாகிஸ்தான் அணியின் ஃபகர் ஜமான் ஒருநாள் போட்டிகளில் 18 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்தார்.
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர்
- 18 இன்னிங்ஸ்- ஃபகார் ஜமான், பாகிஸ்தான்
- 19வது இன்னிங்ஸ்- ஷுப்மான் கில் (இந்தியா), இன்சமாம் உல் ஹக் (பாகிஸ்தான்)
- 21 இன்னிங்ஸ்: விவ் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து), ஜொனாதன் ட்ராட் (இங்கிலாந்து) குயின்டன் டி காக் (தென்னாப்பிரிக்கா), பாபர் ஆசம் (பாகிஸ்தான்), ரௌசி டுசென் (தென் ஆப்ரிக்கா)
அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியல்:
இந்திய பேட்ஸ்மேன் | போட்டிகள் | இன்னிங்ஸ் | சராசரி | அதிகப்பட்ச ரன்கள் |
சுப்மன் கில் | 19 | 19 | 67.53 | 168* |
விராட் கோலி | 30 | 24 | 50.75 | 107 |
ஷிகர் தவான் | 24 | 24 | 45.45 | 116 |
நவ்ஜோத் சிங் சித்து | 27 | 25 | 44.58 | 108 |
ஷ்ரேயாஸ் ஐயர் | 28 | 25 | 41.17 | 113 |
கேஎல் ராகுல் | 28 | 27 | 44.17 | 111 |
எம்எஸ் தோனி | 33 | 29 | 50.19 | 183* |
அம்பதி ராயுடு | 39 | 29 | 48.29 | 124* |
சஞ்சய் மஞ்சரேக்கர் | 32 | 30 | 41.88 | 105 |
அஜய் ஜடேஜா | 50 | 31 | 33.33 | 104 |
சௌரவ் கங்குலி | 46 | 32 | 34.86 | 113 |
ராகுல் டிராவிட் | 35 | 33 | 35.5 | 107 |