நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஹைதராபாத்தில் விளையாடி வருகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில், இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். 


நடந்து வரும் இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இந்தியாவில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்தார். ரோகித் சர்மா இதுவரை 238 போட்டிகளில் விளையாடி 125 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தி உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் எம்.எஸ்.தோனி 123 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 






அதேபோல், கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 71 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்திலும், யுவராஜ் சிங் 4 வது இடத்திலும் உள்ளனர். 


இதையடுத்து, இந்திய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 


7000 ரன்களை கடந்த ரோகித் சர்மா:


சமீபத்தில் முடிவடைந்த இலங்கைக்கு எதிரான மூன்று ஒருநாள் தொடரில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மொத்தமாக 142 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்த தொடரில் இந்திய மண்ணில் 7000 ரன்களை கடந்தார் ரோகித் சர்மா. இந்தியா சார்பில் இந்த சாதனையை நிகழ்த்திய ஆறாவது பேட்ஸ்மேன் ஆனார். 


இந்திய அணியின் கேப்டன் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ரோஹித்தை விட 7401 ரன்கள் முன்னிலை பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளார். காயத்தில் இருந்து திரும்பிய ரோஹித் சர்மா தற்போது சிறப்பான பார்மில் உள்ளார். எனவே இந்த ஆண்டு தோனி சாதனையை விரைவில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்திய அணி விவரம்:


ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா(துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், சர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி






நியூசிலாந்து  அணி விவரம்:


பில் ஆலன், கான்வே, நிகோலஸ், மிட்செல், டாம் லாதம் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), பிளிப்ஸ்,  பிரேஸ்வெல், சாண்ட்னர், ஷ்ப்லே, டஃப் பிரேஸ்வெல், டிக்னர், டஃபி, ஃபெர்கூசன்