IPL 2023: இந்த ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி தொடங்கிய 16வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஐ.பி.எல். தொடரில் வழக்கம்போல் இதற்கு முன்னர் இருந்த சாதனைகள் எல்லாம் தர்க்கப்பட்டு புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது.


காயத்தால் வெளியேறிய வீரர்கள்:


மிகப்பெரிய ஏலம் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்றதால், 10 அணிகளும் தரமான வீரர்களுடன் களமிறங்கும் நோக்கில் இருந்தது. ஆனால் இதற்கு முன்னர் வேறு எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அதிகப்படியான வீரர்கள் காயத்தினால் தொடரில் இருந்து முழுமையாக வெளியேறினர். அப்படி வெளியேறியவர்களில் இந்திய வீரர்கள் யார் என்று பார்த்தால், மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, கொல்கத்தா அணியின் கேட்ப்டன் ஸ்ரேயஸ் ஐயர், டெல்லி அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்.


இதில் ரிஷப் பண்ட் முழுமையாக குணமடைய இன்னும் குறைந்த பட்சம் 6 மாதங்களுக்கு மேல் ஆகும். அதேபோல் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பும்ரா விளையாடுவார் என தொடக்கத்தில் கூறியிருந்தது அணி நிர்வாகம், ஆனால் இறுதியில் இந்த ஆண்டு அவர் விளையாடமாட்டார் என கூறப்பட்டது. அதேபோல் ஸ்ரேய்ஸ் ஐயருக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் காயம் ஏற்பட்டது.  இதனால் தொடரில் இருந்து வெளியேறிய அவர் ஐபிஎல் போட்டியில் இருந்தும் வெளியேறினார்.


லண்டனில் அறுவை சிகிச்சை:


அவருக்கு முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு நேற்று அதாவது ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி அவருக்கு லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது என அங்கிருக்கும் ஊடங்கள் தகவல்கள் வெளியிட்டு இருந்தது. மேலும், இந்ர்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஸ்ரேயஸ் ஐயர் மூன்று மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுள்ளது. அதன் பின்னர் தான், அவர் பயிற்சிக்கே செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:


இதனால் ஸ்ரேயஸ் ஐயர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயஸ் ஐயர் சிறந்த ஃபீல்டரும் ஆவார். ஆனால் இவர் ஆசிய கோப்பை போட்டி மற்றும் உலக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அது குறித்து இப்போது உறுதியாக கூற முடியாது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


மேலும், அறுவை சிகிச்சை நடைபெற்ற நேற்றே ஸ்ரேயஸ் ஐயர் மருத்துவமனை வார்டில் நடந்துள்ளார். அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள ஸ்ரேயஸ் ஐயருக்கு பலரும் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி தொடரின் தொடக்கத்தில் வெற்றிகளை குவித்து வந்தது. ஆனால் தனது கடைசி மூன்று போட்டிகளில் தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.