கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் 2023 மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிருந்து வெளியேற உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.


ஷ்ரேயாஸ் ஐயருக்கு அறுவை சிகிச்சை


ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ள, நிலையில் அவர் சில மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெற்றிருந்தார், ஆனால் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னரே அவர் தொடரில் இருந்து வெளியேறினார். மீண்டும் மீண்டும் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அகமதாபாத் டெஸ்டில் இருந்து பாதியில் வெளியேற வேண்டியதாக இருந்தது. ஏற்பட்டுள்ள காயங்களால் அவர் இப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார். ஒரு செய்தியாளர் கூட்டத்தில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவிடம் ஐயரின் காயம் குறித்து கேட்கப்பட்டபோது, அவர் ஸ்கேன் ரிப்போர்ட் 'அவ்வளவு சிறப்பாக இல்லை' என்று ஒப்புக்கொண்டார்.



இடத்தை விரைவில் நிரப்ப வேண்டும்


இந்திய கிரிக்கெட் அணி 4வது இடத்தில் உள்ள ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சூர்யகுமாரை வைத்துள்ளது. சூர்யா தனது T20I ஃபார்மை ODI கிரிக்கெட்டில் பிரதிபலிக்கவில்லை என்றாலும், குறிப்பாக ODI உலகக் கோப்பையை மனதில் கொண்டு, அந்த இடத்தை பெறுவதற்கான மிகப்பெரிய போட்டியாளராக அவர் இருக்கிறார். இந்திய அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை சூர்யகுமார் பெற்று வருகிறார். கேப்டன் ரோஹித் சமீபத்தில் அதை வெளிப்படுத்தியிருந்தார். “இந்த நேரத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் திரும்புவது பற்றி எங்களுக்குத் தெரியாது. ஒரு இடம் காலியாக உள்ளது மற்றும் சூர்யா வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் நிறைய திறனை வெளிப்படுத்தியுள்ளார், ”என்று ரோஹித் கூறியிருந்தார்.


தொடர்புடைய செய்திகள்: World No.1 ODI team: தொடரை இழந்து, முதலிடத்தையும் இழந்த இந்திய அணி.. ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடத்தில் ஆதிக்கம்!


சூர்யாவிற்கு இன்னும் நேரம் கொடுக்க வேண்டும்


மேலும் ரோகித், "நல்ல வீரர்களுக்கு நீண்ட காலம் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று முன்பே பலமுறை கூறியிருக்கிறேன். நிச்சயமாக, ஒருநாள் போட்டி வடிவங்களிலும் அவர் அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அவர் மனதிலும் விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் நான் சொன்னது போல், திறன் கொண்ட வீரர்களுக்கு அந்த குறிப்பிட்ட இடத்தில் போதுமான நேரம் கொடுக்கப்பட வேண்டும். ஆம், கடந்த இரண்டு போட்டிகளிலும், முந்தைய தொடரிலும் அவர் விரைவாக வெளியேறினார். ஆனால் அவருக்கு நிலையான ரன் எடுக்க வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்", என்று கூறினார்.



கேகேஆர் கேப்டன் யார்?


“யாரோ காயம்பட்டதாலோ அல்லது யாரோ கிடைக்காததாலோ அவருக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை மட்டும் வைத்து கணக்கிடுவது உகந்ததல்ல. ஒரு நிலையான வாய்ப்பு கொடுக்கப்பட்ட பிறகு, ரன்கள் வரவில்லை அல்லது அவர் சங்கடமாக இருக்கிறார் என்பதை நீங்கள் உணர்ந்தால், நாங்கள் அதைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவோம், ”என்று இந்திய கேப்டன் மேலும் கூறினார்.


ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாத நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய கேப்டனைக் கண்டுபிடிக்க வேண்டிய நிலையில், அணி நிர்வாகம் ஆண்ட்ரே ரஸல் பக்கம் திரும்பலாம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைப் பொறுத்தவரை, ஐயரின் காயம், இந்திய டெஸ்ட் அணிக்காக சிறிது காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வந்து, ரஞ்சி கோப்பைகளில் தெரிக்கவிட்ட உள்நாட்டு கிரிக்கெட் வீரரான சர்பராஸ் கானுக்கு வாய்ப்புகள் திறக்கக்கூடும் என விளையாட்டு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.