ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபிக்கு பிறகு, இரு அணிகளும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில், மும்பையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.
விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை துவம்சம் செய்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்த போட்டிக்கு பிறகு ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி 114 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணி 112 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இருந்தனர்.
தொடர் யாருக்கு என்ற நிலைமையில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் நேற்று களமிறங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 269 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், பின் வரிசை வீரர்கள் சொதப்பலால் இந்திய அணி 248 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது.
இதையடுத்து, ஒருநாள் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி 113. 286 புள்ளிகள் பெற்று ஐசிசி ஆடவர் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியது. அதை தொடர்ந்து, 112.638 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாவது இடத்தில் சரிந்தது.
எங்களுக்கு புதிய உலக நம்பர் 1 அணி கிடைத்துள்ளது என ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து இந்த பதிவில், “ எங்களுக்கு புதிய உலக நம்பர் 1 அணி கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் ஐசிசி ஆடவர் ஒருநாள் அணி தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.” என பதிவிட்டிருந்தது.
ஒருநாள் தரவரிசை அட்டவணை:
தரவரிசை | அணி | புள்ளி |
---|---|---|
1 | ஆஸ்திரேலியா | 113 |
2 | இந்தியா | 113 |
3 | நியூசிலாந்து | 111 |
4 | இங்கிலாந்து | 111 |
5 | பாகிஸ்தான் | 106 |
6 | தென்னாப்பிரிக்கா | 101 |
7 | வங்கதேசம் | 95 |
8 | இலங்கை | 88 |
9 | மேற்கிந்திய தீவுகள் | 72 |
10 | ஆப்கானிஸ்தான் | 71 |