ஹாங்காங்கில் நடந்துவரும் பெண்கள் வளர்ந்து வரும் அணி ஆசிய போட்டியில் இந்திய பெண்கள் ஏ கிரிக்கெட் அணி களமிறங்கியது. இந்திய பெண்கள் ஏ அணி தனது முதல் போட்டியில் ஹாங்காங்கை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றிப்பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில், ஆல்ரவுண்டர் ஸ்ரேயங்கா பாட்டீல், அபாரமாக பந்துவீசி வெறும் 2 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். 


 ஸ்ரேயங்காவின் அசத்தல் பந்துவீச்சால் இந்திய மகளிர் ஏ கிரிக்கெட் அணி ஹாங்காங் மகளிர் அணியை 14 ஓவர்களில் வெறும் 34 ரன்களுக்கு சுருட்டியது. 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 5.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது. வெறும் 2 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்திய ஸ்ரேயங்காவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.


ஆட்ட நாயகி விருது பெற்ற பிறகு பேசிய பாட்டீல், “ இந்த ஜெர்சியை அணிந்ததற்கு நான் மிகவும் பெருமை படுகிறேன். நான் சிறுவயதில் இருந்தே, இந்த ஜெர்சியை அணிய வேண்டும் என்பது கனவு கண்டேன். அது தற்போது நிறைவேறியுள்ளது. அறிமுக போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தியது ஒரு அற்புதமான உணர்வு” என தெரிவித்தார். 






பாட்டீலை தவிர, பார்ஷவி சோப்ராம் மன்னத் காஷ்யப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும், டாட்டாஸ் சாது ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர். 


இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் ஏ மற்றும் நேபாள மகளிர் அணியை உள்ளடக்கிய குரூப் ஏ பிரிவில் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.  இந்திய மகளிர் ஏ அணி தனது அடுத்த போட்டியில் நேபாளம் ஏ அணியை ஜூன் 15ம் தேதி எதிர்கொள்கிறது. 


விராட் கோலிதான் என்னுடைய ஹீரோ:


 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 20 வயதான ஸ்ரேயங்கா பாட்டீல், விராட் கோலியைப் பார்த்து தான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதாக கடந்த பெண்கள் ஐபிஎல் தொடரில் தெரிவித்திருந்தார். அப்போது பேசிய அவர், விராட் கோலியை கடவுளாக கருதி, துள்ளார். விராட் கோலியை கடவுளாக கருதிய ஸ்ரேயங்கா பாட்டீல், வேகப்பந்து வீச்சாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், ஆனால் இப்போது அவர் ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளராகிவிட்டார்.






மகளிர் ஐபிஎல் முதல் சீசனில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மகளிர் அணிக்காக விளையாடும் வாய்ப்பு ஸ்ரேயங்காவுக்கு கிடைத்தது. ஸ்ரேயங்கா மகளிர் ஐபிஎல்லில் இதுவரை  7 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 17 ரன்கள் விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறந்த பந்துவீச்சாக அமைந்தது.