பிபிஎல் போட்டிகள்:


சமூக வலைதளங்களில் சில நாட்களாக அதிகம் விமர்சிக்கப்பட்டு வருபவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக். இவர் சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய மனைவியும், டென்னிஸ் வீராங்கனையுமான சானியா மிர்சாவை விவாகரத்து செய்தார். இதனிடையே, பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை 3-வது திருமணம் செய்து கொண்டார். ஆனால், இந்த திருமணத்தில் சோயப் மாலிக்கின் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. சானியா மிர்சாவை விவாகரத்து செய்து விட்டு 3 வது திருமணம் செய்து கொண்டது பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


 


அடுத்தடுத்து நோ பால் வீசிய சோயப் மாலிக்:


இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு அடுத்த நாளே வங்கதேசத்தில் நடைபெற்று வரும் பிபிஎல் (Bangladesh Premier League ) போட்டியில் கலந்து கொண்டார். அதன்படி, பார்ச்சூன் பாரிஷால் அணிக்காக விளையாடி வரும் அவர் கடந்த வாரம் நடைபெற்ற போட்டியின் போது குல்னா டைகர்ஸ் அணிக்கு எதிராக விளையாடினார். அந்த போட்டியின் போது ஒரு நேரத்தில் மூன்று நோ பால்களை வீசினார். மேலும், 18 ரன்களை வாரி வழங்கினார்.  மெதுவாக ஓடிவந்து ஸ்பின் செய்யும் இவர் ஒரே நேரத்தில் 3- நோ பால்கள் வீசியது கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதோடு, டெத் ஓவர்களில் களமிறங்கி அதிரடியாக விளையாட வேண்டிய சோயப் மாலிக் 6 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனை விமர்சித்த ரசிகர்கள் சோயப் மாலிக் மேட்ச் பிக்சிங் செய்வதாக சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்தனர்.


ஒப்பந்தத்தை ரத்து செய்த பார்ச்சூன் பாரிஷால் அணி:






இதனையடுத்து பிபிஎல் தொடரில் சோயப் மாலிக் தங்களுடைய அணிக்காக விளையாடுவதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பார்ச்சூன் பாரிஷால் அணி நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது. வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் பரிந்துரைப்படியே இந்த முடிவை தாங்கள் எடுத்துள்ளதாகவும் அந்த அணி நிர்வாகம் கூறியது. இதனால் வங்கதேசத்தில் இருந்து உடனடியாக சோயப் மாலிக் நாடுதிரும்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. முன்னதாக, சானியா மிர்சாவை விவாகரத்து செய்த சில நாட்களிலேயே சோயப் மாலிக்குக்கு இது போன்ற ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டது என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


 


 


மேலும் படிக்க: Musheerkhan: எட்டு வயதிலே சம்பவம்! இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் - யார் இந்த முஷீர்கான்?


 


மேலும் படிக்க: Novak Djokovic: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதி: 2,195 நாட்களுக்குப் பிறகு நோவக் ஜோகோவிச்சிற்கு முதல் தோல்வி