இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை. அவர் சமீபத்தில் தன்னுடைய அறுவை சிகிச்சை தொடர்பான பதிவை வெளியிட்டிருந்தார். அதன்பின்னர அவர் மீண்டும் நடக்க முயற்சி செய்து வருகிறார். இது தொடர்பான பதிவுகளையும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவுடன் இருக்கும் போது இந்திய வீரர் ஷிகர் தவான் நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஷிகர் தவான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அமர்ந்து கொண்டிருக்கும் ரவீந்திர ஜடேஜாவிற்கு முன்பாக ஷிகர் தவான் நடனமாடும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோவை பலரும் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். அத்துடன் பலரும் இது தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஷிகர் தவான் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சமீபத்தில் இடம்பெறுவதில்லை. அவர் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் மட்டும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார். இந்தச் சூழலில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவர் கேப்டனாக செயல்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்:
அக்டோபர் 6- முதல் ஒருநாள் போட்டி
அக்டோபர் 9- இரண்டாவது ஒருநாள் போட்டி
அக்டோபர் 11- மூன்றாவது ஒருநாள் போட்டி
ஏனென்றால் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் அக்டோபர் 5ஆம் தேதி ஆஸ்திரேலிய கிளம்ப உள்ளதாக தெரிகிறது. ஆகவே இந்தத் தொடருக்கு ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி விளையாடும் என்று கருதப்படுகிறது. இதில் இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கருதப்படுகிறது. தென்னாப்பிரிக்க அணியுடனான ஒருநாள் ஐசிசி சூப்பர் லீக் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆகவே இந்தத் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க: உலக சாம்பியன் ஆஸி.யை வீழ்த்திய இந்தியா.. டி20 தரவரிசையில் நடந்தது என்ன தெரியுமா?