டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான்,நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா உள்ளிட்ட அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. அதில் முதல் சூப்பர் 12 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்தது. இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது சூப்பர் 12 போட்டியிலும் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இம்முறை டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி போட்டிகளில் யுஏஇயில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பையும் அங்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களின் யுஏஇ ஐபிஎல் போட்டிகளின் செயல்பாடுகள் மற்றும் அவர்களின் உலகக் கோப்பை போட்டி செயல்பாடுகள் என்னென்ன?
ஷர்துல் தாகூர்:
இந்திய கிரிக்கெட் அணியில் சமீப காலங்களாக தன்னுடைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் அசத்திவருபவர் ஷர்துல் தாகூர். இவர் 2016ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் சிறப்பாக பந்துவீசியதன் காரணமாக இந்திய அணியில் இடம்பிடித்தார். எனினும் அப்போது ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அதன்பின்னர் 2017ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் களமிறங்கினார். அதைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் முதல் முறையாக களமிறங்கினார். 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்தினார். அத்துடன் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக பந்துவீசி வருகிறார்.
ஐபிஎல் யுஏஇ கடைசி 5 போட்டிகள்:
ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி யுஏஇயில் நடைபெற்றது. அதில் கடைசி 5 போட்டிகள் ஷர்துல் தாகூரின் செயல்பாடுகள்:
போட்டி |
மைதானம் |
பந்துவீச்சு |
பேட்டிங் |
சன்ரைசர்ஸ் |
ஷார்ஜா |
1-37 |
களமிறங்கவில்லை |
டெல்லி கேபிடல்ஸ் |
துபாய் |
2-13 |
களமிறங்கவில்லை |
பஞ்சாப் கிங்ஸ் |
துபாய் |
3-28 |
களமிறங்கவில்லை |
டெல்லி கேபிடல்ஸ் |
துபாய் |
0-36 |
0(1) |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
துபாய் |
3-38 |
களமிறங்கவில்லை |
2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஷர்துல் தாகூர் பேட்டிங்கைவிட பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக சென்னை வெற்றி பெற்ற பல போட்டிகளில் பந்துவீச்சில் இவருடைய பங்கு சிறப்பாக அமைந்தது. இவருடைய சிறப்பான பந்துவீச்சு காரணமாக டி20 உலகக் கோப்பைக்கான ரிசர்வ் லிஸ்ட்டில் இடம்பெற்று இருந்த தாகூர் இந்திய அணியில் இடம்பிடித்தார்.
டி20 உலகக் கோப்பை:
டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் போட்டியில் ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இவர் களமிறங்கினார். அதில் பேட்டிங்கில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
போட்டி |
மைதானம் |
பந்துவீச்சு |
பேட்டிங் |
பாகிஸ்தான் |
துபாய் |
அணியில் இல்லை |
அணியில் இல்லை |
நியூசிலாந்து |
துபாய் |
0-17(1.3) |
0(3) |
பந்துவீச்சில் இவர் 1.3 ஓவர்கள் மட்டுமே வீசி 17 ரன்களை விட்டு கொடுத்தார். ஐபிஎல் தொடரில் நல்ல ஃபார்ம் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்த ஷர்துல் தாகூர் இனிவரும் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி பும்ராவிற்கு பக்க பலமாக இருப்பார் என்று கருதப்படுகிறது. அதேபோல் இவர் பேட்டிங்கில் சற்று கவனம் செலுத்தினால் இந்திய அணிக்கு அது கூடுதல் பலமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஒரே ஒரு 88... இது தானா சூர்யக்குமார் தேர்வாக காரணம்? ஆராயும் ABP நாடு!