ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஷேன் வார்னே நேற்று காலமானார். அவருக்கு வயது 52. கிரிக்கெட் ஜாம்பவானான வார்னே, மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


கிரிக்கெட் வட்டாரத்தில் இருந்தும், உலகெங்கிலும் இருந்தும் வார்னேவுக்கு இரங்கல் குவிந்து வருகிறது. தனது அசாத்திய சுழற்பந்துவீச்சால் எதிரணியை கலங்கடித்த கிரிக்கெட் வீரருக்காக ஆழந்த இரங்கல்கள் பதிவாகி வருகிறது. இந்நிலையில், ட்விட்டர் இன்ஸ்டாகிராம் என சமூகவலைதளத்தில் அவ்வப்போது பதிவுகளை பதிவிட்டு வந்த வார்னேவின் கடைசி பதிவுகள் வைரலாகி வருகின்றன. 


வார்னே இறப்பதற்கு 12 மணி நேரத்திற்கு முன்புதான் தனது ட்விட்டர் பக்கத்தில் மறைந்த ஆஸ்திரேலிய வீரர் ராட் மார்ஷூக்கு இரங்கல் பதிவை பதிவிட்டிருக்கிறார். அந்த நாள் முடிவதற்குள் வார்னே மறைந்ததிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரே நாளில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரண்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் உயிரிழ்ந்திருப்பது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.






இதே போல, தனது கடைசி இன்ஸ்டாகிராம் பதிவில், “Operation shred ஆரம்பம். 10 நாட்கள் ஆகியுள்ளது. ஜூலை மாதத்திற்குள் ஃபிட்டாக மாற வேண்டும். இதை செய்து காட்டுவோம்” என பதிவிட்டிருக்கிறார். 






தனது வாழ்நாள் முழுவதும் உடல் எடை அதிகமாக இருப்பது தொடர்பான விமர்சனங்களை எதிர்கொண்டு வந்த வார்னே, கடந்த 2019-ம் ஆண்டு ஃபிட்டாக வேண்டும் என பயிற்சி மேற்கொண்டார். அந்த ஆண்டு, கிட்டத்தட்ட 14 கிலோ எடையை குறைத்த அவர், அனைவராலும் கவனிக்கப்பட்டார். தொடர்ந்து ஃபிட்டாக இருக்க வேண்டும் என முயற்சி எடுத்து வந்த அவர், 2022 ஜூலை மாதத்திற்குள் இன்னும் ஃபிட்டாக வேண்டும் என குறிக்கோள் வைத்திருந்தது அவர் இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தெரிய வந்துள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண