ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மறைவுக்கு சச்சின் டெண்டுல்கர் இரங்கல் தெரிவிதுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஷேர் வார்னேவின் மரணம் அதிர்ச்சியும், திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவரை ரொம்பவும் மிஸ் செய்வேன். களத்திலோ அல்லது வெளியிலோ உங்களுடன் ஒருபோதும் மந்தமான தருணம் இருந்ததில்லை. ஆன் ஃபீல்ட் மற்றும் ஆஃப் ஃபீல்ட் கேலிக்கூத்துகளை எப்போதும் பொக்கிஷமாகக் கருதுவோம். உங்கள் மனதில் இந்தியாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இந்தியர்கள் மனதிலும் உங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு’ எனப் பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே இன்று காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் தாய்லாந்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 52 . கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவின் திடீர் மறைவால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுபவர் ஷேன் வார்னே. சிட்னியில் இந்திய அணிக்கு எதிராக 1992ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்