டிராபியை வென்ற இந்தியா – ரோகித்தை பாடி ஷேமிங் செய்த ஷாமா முகமது என்ன சொல்லிருக்கார் பாருங்க!
துபாயில் 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு, காங்கிரஸ் தலைவர் ஷாமா முகமது, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

துபாயில் 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு, காங்கிரஸ் தலைவர் ஷாமா முகமது, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “2025 சாம்பியன் டிராபியை வென்றதில் அபாரமாக செயல்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள்! அற்புதமான 76 ரன்களுடன் முன்னணியில் இருந்து வழிநடத்தி, வெற்றிக்கான தொனியை அமைத்த கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வாழ்த்துகள். ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் முக்கியமான ஆட்டங்களை விளையாடி, இந்தியாவை பெருமைக்கு இட்டுச் சென்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.
2025 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியின் போது ரோஹித் சர்மாவின் உடற்தகுதி குறித்து ஷாமா முகமது சமீபத்தில் தெரிவித்த கருத்து பரவலாக விமர்சிக்கப்பட்டது.
ஷமா முகமது தனது எக்ஸ் தளத்தில், ''ரோஹித் சர்மா உல பருமன் கொண்ட விளையாட்டு வீரர். அவர் தனது எடையை குறைக்க வேண்டும். அவர் இந்தியா இதுவரை பெற்ற மிகவும் ஈர்க்க முடியாத கேப்டன்'' எனத் தெரிவித்திருந்தார்.
மற்றொரு எக்ஸ் தளத்தில், “''சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், தோனி, விராட் கோலி, கபில் தேவ், சாஸ்திரி ஆகியோருடன் ஒப்பிடும்போது ரோகித் சர்மா உலகத் தரம் வாய்ந்த வீரரா என்ன? அவர் ஒரு சாதாரண கேப்டன். அதிர்ஷ்டத்தில் இந்திய கேப்டன் ஆன வீரர்'' என்று சாடினார்.
ரோகித் சர்மாவை பாடி ஷேமிங் செய்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமதுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன.
இந்நிலையில் தான் ஷமா முகமது ரோகித் தலைமையிலான இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பவுலிங்கில் இறங்கிய இந்திய அணிக்கு முதலில் ஃபாஸ்ட் பவுலிங் அவ்வளவாக விக்கெட்டை பறிக்க இடம் கொடுக்கவில்லை. இதையடுத்து ரோகித் ஸ்பின்னர்களை பவர் பிளேயிலேயே களமிறக்கினார்.
அந்த யுக்தி செம்மையாக கை கொடுத்தது. நன்றாக சிக்ஸ், ஃபோர் என அடித்து ஆடிய ரச்சின் ரவீந்திராவை குல்தீப் அசால்ட்டாக தூக்கினார். அதையடுத்து வில்லியம்சனும் சிக்கினார்.
இந்த விக்கெட்டுகள் இந்திய அணிக்கு ஒரு திருப்புமுனையாக பார்க்கப்பட்டது. 251 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கமே நிதானமாக சிறப்பாக விளையாடியது. இந்திய அணி 100 ரன்களை கடக்கும்வரை ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் சிறப்பாக விளையாடினர் ரோகித் சர்மாவும் கில்லும். ஓப்பனிங் இறங்கி ரோகித் சர்மா 76 எடுத்து அவுட்டானார். அதன்பின் வந்த இந்திய வீரர்கள் அணியை வெற்றிப்பாதை நோக்கி அழைத்துச் சென்றனர்.
வெற்றிக்கு பின் பேசிய ரோகித் சர்மா, “"எங்களை ஆதரிக்க வந்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். கூட்டம் அற்புதமாக இருந்தது. எங்கள் சொந்த மைதானம் அல்ல, ஆனால் அவர்கள் அதை எங்கள் சொந்த மைதானமாக மாற்றினர். மிகவும் திருப்திகரமான வெற்றி. எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் மீது ஆரம்பத்தில் இருந்தே அதிக எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் அவர்கள் ஒருபோதும் ஏமாற்றமடையவில்லை. அது அவர்களுக்கு உதவியது, அதை நாங்கள் எங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டோம். எங்கள் பந்துவீச்சில் நாங்கள் மிகவும் சீராக இருந்தோம்.
கே.எல்.ராகுல் மிகவும் உறுதியான மனம் கொண்டவர், அவரைச் சுற்றியுள்ள அழுத்தத்தால் ஒருபோதும் பயப்பட மாட்டார். அவர் எங்களுக்காக ஆட்டத்தை முடித்தார். அழுத்த சூழ்நிலையில் விளையாட அவர் சரியான ஷாட்டைத் தேர்ந்தெடுப்பார். இது மீதமுள்ள பேட்டர்களை சுதந்திரமாக விளையாட வைத்தது. உதாரணமாக, ஹர்த்திக் பாண்ட்யா. அனைத்து பேட்டர்களும் காட்டிய ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்ஷிப் சிறப்பு வாய்ந்தது. ரசிகர்களுக்கு மிகவும் நன்றி. அவர்களின் ஆதரவை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்” எனத் தெரிவித்தார்.