பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேட்பனும், அதிரடி பேட்ஸ்மேனுமான ஷாகித் அப்ரிடி (Shahid Afridi)- யின் மகளுக்கும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடிக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இந்நிலையில், மாமனாரும், மருமகனும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்கள் வைரல் ஆகியுள்ளது.


மாமா - மாப்பிள்ளை கிரிக்கெட்:


புது மாப்பிள்ளை ஷாகினை வரவேற்கும் விதமாக ஷாகித் இதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அதிரடி பேட்ஸ்மேனும், பவுலரும் களத்தில் சந்தித்து கொண்டால் என்ன நடக்கும்? அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் பிரபலங்களின் வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பல கமெண்ட்களுடன் பகிரப்பட்டது. 


முட்டியில் ஏற்பட்டுள்ள காயத்தில் இருந்து மீண்டு வரும் ஷாகின்ஷா அப்ரிடி, தனது பயிற்சி ஆட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளார். இவர் விரைவில் குணமடைந்து அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாகித் அப்ரிடியுடன் விளையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. 






டிவிட்டரில் பகிரப்பட்டுள்ள வீடியோ, க்ரீஸ் லைனில் இருந்து ஷாகின் அப்ரிடி பவுலிங் செய்ய ஷாகித் அப்ரிடி அவரது பந்துகளை சிக்ஸர் விளாகிறார்.அதேபோல ஷாகித் அப்ரிடியில் பந்துகளையும் ஷாகின் பேட்டிங் செய்கிறார்.


இந்த வீடியோவை ஷாயின் அப்ரிடி” உங்களுடன் விளையாடுவதில் எப்போதுமே மகிழ்ச்சிதான் லாலா’’என்று கேப்சனுடன் பகிர்ந்துள்ளார்.