தமிழ்நாடு பிரிமீயர் லீக் 2023 தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜூன் 12 ல் தொடங்கிய இந்த தொடர் வருகின்ற ஜூலை 12, 2023 வரை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. நீ.. நான்.. என்று தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், டிஎன்பிஎல்லில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்கள் எடுத்த வீரர்கள் பட்டியலை இங்கே காணலாம்.

Continues below advertisement

TNPL 2023 அதிக ரன்கள் பட்டியல்: 

சாய் சுதர்சன்: 

டிஎன்பிஎல் 2023 தொடரில் லைகா கோவை கிங்ஸ் வீரர் சாய் சுதர்சன், அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 74.20 என்ற சராசரியுடன் 371 ரன்கள் எடுத்துள்ளார். 

பாபா அபராஜித்: 

இவருக்கு அடுத்தபடியாக சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியின் பாபா அபராஜித் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் இதுவரை 6 இன்னிங்ஸ்களில் 54.60 என்ற சராசரியுடன் இரண்டு அரைசதங்கள் உள்பட 273 ரன்கள் எடுத்துள்ளார். 

சிவம் சிங்: 

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க வீரர் சிவம் சிங், அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் அபராஜித்துக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர் 5 போட்டிகளில் 211 ரன்கள் குவித்துள்ளார். 

TNPL 2023 அதிக விக்கெட்கள் பட்டியல்: 

ஷாரூக் கான்:

தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் பட்டியலில் லைகா சூப்பர் கிங்ஸ் கேப்டன் ஷாரூக் கான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 

சரவணகுமார்: 

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சரவண குமார் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் இதுவரை 5 போட்டிகளில் 10 விக்கெட்கள் எடுத்துள்ளார். 

புவனேஸ்வரன்: 

ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் வீரர் புவனேஸ்வரன், இதுவரை 4 போட்டிகளில் 10 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்த ஆண்டு நான்கு விக்கெட்கள், ஒரு ஐந்து விக்கெட்கள் எடுத்த ஒரே பந்து வீச்சாளர் இவர்தான். 

 

டிஎன்பிஎல் புள்ளி பட்டியல்: 

எண் குழு போட்டி வெற்றி தோல்வி முடிவு இல்லை நிகர ரன் ரேட் புள்ளிகள்
1 லைகா கோவை கிங்ஸ் 6 5 1 0 +2.138 10
2 நெல்லை ராயல் கிங்ஸ் 5 4 1 0 +0.558 8
3 திண்டுக்கல் டிராகன்ஸ் 5 4 1 0 +0.513 8
4 Siechem மதுரை பாந்தர்ஸ் 5 3 2 0 -0.005 6
5 சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 2 4 0 +0.298 4
6 IDream திருப்பூர் தமிழர்கள் 5 2 3 0 -0.563 4
7 சேலம் ஸ்பார்டன்ஸ் 5 1 4 0 -1.693 2
8 பா11சி திருச்சி 5 0 5 0 -1.745 0