ஐ.பி.எல் 2024:


சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானதுஅந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்அதன்படிகடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது


அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறதுஅதன்படிமார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளனஇந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.


விலகிய ஹாரி புரூக்:


முன்னதாக, ஆர்.சி.பி அணி எப்படி இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லையோ அதேபோல், தான் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் இந்த அணி ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. ஆனால், அந்த அணி உலகின் தலைசிறந்த வீரர்களை ஏலத்தில் எடுத்து அவர்களுக்கு விளையாட வாய்ப்பு கொடுக்கும். சரியாக விளையாடாத பட்சத்தில் உடனே அவர்களை தங்கள் அணியில் இருந்து நீக்கி விடும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. அப்படித்தான் ஏபி டி வில்லியர்ஸை ஏலத்தில் எடுத்த டெல்லி அணி அவசரப்பட்டு அணியில் இருந்து அவரை நீக்கியது. அதேபோல், டேவிட் வார்னரையும் நீக்கியது. ஆனால், டேவிட் வார்னர் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். 


இச்சூழலில் தான் இந்த முறை வார்னர் மீண்டும் டெல்லி அணிக்காக விளையாட உள்ளார்.  இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு வாகன விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை இந்த முறை கேப்டன் பொறுப்பில் இருந்து வழிநடத்த இருப்பது உறுதியாகியுள்ளது. இது அந்த அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறதுஇந்நிலையில் தான் டெல்லி ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி கிடைத்து இருக்கிறது. அதாவது, இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து விலகி இருக்கிறார்.


தனிப்பட்ட காரணங்களால் இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என்று கூறியுள்ளார். இது ரசிர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஹாரி புரூக்கை டெல்லி அணி ரூபாய் 4 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் விலகி இருப்பது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில் மாற்று வீரராக ஆஸ்திரேலிய அணியின் 21 வயதான ஜாக் பிரேசர் என்ற வீரரை தேர்வு செய்ய டெல்லி அணி முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது