இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இதில் இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. இதனால் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டினை முதல் ஓவரில் இழந்து வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கில் தனது விக்கெட்டினை இரண்டாவது ஓவரில் ரன்  ஏதும் எடுக்காமல் இழந்து வெளியேறினார். 


முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற்றாலே தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்பினை உருவாக்க முடியும். இத்தகைய சூழ்நிலையில் இரு அணிகளும் இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெறுவதற்கு தங்களால் இயன்ற முயற்சியில் ஈடுபடும். 


இந்த தொடர் தென்னாப்பிரிக்காவில் நடந்தாலும், இந்திய அணியே கடந்த கால புள்ளிவிவரங்களின்படி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஏனென்றால், கடந்த 8 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்க அணியால் டி20 தொடரில் ஒருமுறை கூட இந்திய அணியை வீழ்த்த முடியவில்லை. கடைசியாக இரு அணிகளும் இணைந்து தென்னாப்பிரிக்கா மண்ணில் நான்கு டி20 தொடர்களில் விளையாடியுள்ளன. இதில், இந்தியா இரண்டில் வென்றுள்ள நிலையில், இரண்டு தொடர்கள் டிராவில் முடிந்தது. தென்னாப்பிரிக்கா கடைசியாக 2015-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் வெற்றி பெற்றது. அப்போது கூட இந்திய மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.


டி20 தொடரில் இந்தியாவின் ஆதிக்கம்:


இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே இதுவரை 8 டி20 தொடர்கள் நடந்துள்ளன. இதில் 8 தொடர்களில் 2 தொடர்கள் சமன் ஆன நிலையில், 4 தொடர்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. அதாவது தென்னாப்பிரிக்கா அணி இதுவரை இரண்டு தொடர்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. 


மேலும், தென்னாப்பிரிக்காவில் நடந்த 4 டி20 தொடரில் இந்திய அணி 3 முறை வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவை அவர்களது சொந்த மைதானத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே தொடரில் தோற்கடிக்க முடிந்தது.


ஒட்டுமொத்த சாதனை:



  • 2006ம் ஆண்டு: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒரே ஒரு போட்டி கொண்ட டி20 தொடரை இந்திய அணி வென்றது.

  • 2011ம் ஆண்டு: தென்னாப்பிரிக்காவில் மீண்டும் ஒரு போட்டி டி20 தொடர் நடந்தது, இதையும் இந்தியா வென்றது.

  • 2012ம் ஆண்டு: இந்த ஆண்டும் ஒரு போட்டித் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த முறை தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

  • 2015ம் ஆண்டு: இந்தியாவில் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை தென்னாப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை க்ளீன் ஸ்வீப் செய்தது.

  • 2018ம் ஆண்டு: தென்னாப்பிரிக்காவில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

  • 2019ம் ஆண்டு: இந்தியாவில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

  • 2022ம் ஆண்டு: இந்தியாவில் இந்த 5 போட்டிகள் கொண்ட தொடர் 2-2 என சமனில் முடிந்தது.

  •  2022ம் ஆண்டு: இந்தியாவில் கடைசியாக விளையாடிய இந்தத் தொடரில் தென்னாப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. 


தென்னாப்பிரிக்கா (ப்ளேயிங் லெவன்): மேத்யூ ப்ரீட்ஸ்கே, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம்(கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், அண்டில் பெஹ்லுக்வாயோ, ஜெரால்டு கோட்ஸி, லிசாட் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி


இந்தியா (பிளேயிங் லெவன்): யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்