இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்:


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறதுஅதன்படிமுதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணிஇரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறதுஇதனிடையேஇந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று  பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.


தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய யஜஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்து வந்த சுப்மன் கில் டக் அவுட் முறையில் வெளியேறினார். ராஜத் படிதர் 5 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 196 பந்துகளில் 14 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 131 ரன்களை குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ஜடேஜாவும் 199 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். முன்னதாக இந்த போட்டியின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் இறங்கினார் சர்ஃபராஸ் கான். தன்னுடைய அறிமுக போட்டியில் எப்படி விளையாட போகிறார் கான் என்ற எதிர்பார்ப்பு இந்திய அணிக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் எழுந்தது.


ப்ளைன் கிஸ் கொடுத்த சர்ஃப்ராஸ் கான் மனைவி:






இந்நிலையில் தான் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அரைசதம் விளாசி அனைவரின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் சர்ஃபராஸ் கான். அதன்படி மொத்தம் 66 பந்துகள் களத்தில் நின்ற அவர் 9 பவுண்டரிகள் 1 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 62 ரன்களை குவித்தார். இதனிடையே சர்ஃபராஸ் கான் விளையாடுவதை மைதானத்தில் இருந்து அவருடைய தந்தை நௌஷாத் கான் மற்றும் மனைவி ரோமானா ஜாஹூர் ஆகியோர் நேரடியாக பார்வையிட்டனர். அப்போது சர்ஃப்ராஸ் கான் 48 வது பந்தில் அரைசதம் விளாசியாதை பார்த்த அவருடைய மனைவி ரோமானா ஜாஹூர்  மற்றும் தந்தை நெளஷாத் கான் நெகிழ்ச்சியில் மூழ்கினார்கள்.


பின்னர் சர்ஃப்ராஸ் கான் மனைவி ரோமனா ஜாஹூர் மைதானத்தில் இருந்த படி தன்னுடைய கணவரை பார்த்து ப்ளைன் கிஸ் கொடுத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தற்போது அது தொடர்பான வீடியோ காட்சி தான் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக 26 வயது ஆகும் சர்ஃப்ராஸ் கான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி ரோமானா ஜாஹூரை கரம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: IND vs ENG 3rd Test: இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்...சோயப் பஷீரை கழட்டி விட்ட இங்கிலாந்து! பிளேயிங் லெவன் அறிவிப்பு!


 


மேலும் படிக்க: Watch Video: இப்படி கூடவா பந்து போடுவாங்க.. வாயை பிளந்த நெட்டிசன்கள்...குவைத் கிரிக்கெட்டில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!