Duleep Trophy: துலீப் கோப்பை.. நடராஜன் - சஞ்சு சாம்சனை கழட்டி விட்ட பிசிசிஐ!

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து சஞ்சு சாம்சன் மற்றும் நடராஜன் ஆகியோர் இந்த தொடரில் கழட்டி விடப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் 4 அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் சீனியர் மற்றும் ஜூனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதே நேரம் சஞ்சு சாம்சன் மற்றும் நடராஜன் ஆகியோர் இந்த தொடரில் கழட்டி விடப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

சஞ்சு சாம்சன்:

இந்திய அணியின் இளம் வீரராக இருப்பவர் சஞ்சு சாம்சன். இவருக்கு அதிகம் வாய்ப்பு வழங்கப்படாமல் இருப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் கிடைக்கும் வாய்ப்பையும் இவர் சரியாக பயன்படுத்துவதில்லை என்றும் ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது. இலங்கைக்கு எதிரான தொடரின் போது கூட சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் துலீப் கோப்பை தொடரில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

நடராஜன்:

ஐபிஎல் மற்றும் தமிழ் நாடு ப்ரீமியர் லீக் தொடர்களில் தன்னுடைய திறமயை சிறப்பாக வெளிப்படுத்தி வருபவர் நடராஜன். இவருக்கு டி20 உலகக் கோப்பையின் போதே வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிசிசிஐ கழட்டி விட்ட சூழலில் சொந்த மண்ணில் நடத்தப்படும் துலீப் கோப்பை தொடரிலும் கழற்றி விடப்பட்டுள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola