ஆசிய கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையேயான கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. நேற்றைய போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ரோகித்சர்மா, விராட்கோலி ஆட்டமிழந்த பிறகு இக்கட்டான நேரத்தில் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை ரவீந்திர ஜடேஜாவும், ஹர்திக் பாண்ட்யாவும் வெற்றி பெற வைத்தனர்.
போட்டியின் வெற்றிக்கு பிறகு, வெற்றிக்கு காரணமான ஜடேஜா பரிசளிப்பு விழாவிற்கு வந்தபோது அவரை பிரபல வர்ணனையாளரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேட்டி எடுத்தார். அப்போது, அவர் ஜடேஜாவிடம், “ இங்கே ஜடேஜா என்னுடன் உள்ளார். அவரிடம் முதல் கேள்வி. என்னுடன் பேச உங்களுக்கு சம்மதம்தானே..?” என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த ஜடேஜா, “ ஆம்.ஆம். கண்டிப்பாக. எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை” என்று பதிலளித்தார். இந்த நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த காலங்களில் ரவீந்திர ஜடேஜாவை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மிக கடுமையாக விமர்சித்து வந்தார். 2019ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது அவரை துண்டு துணுக்கு வீரர் என்று விமர்சித்திருந்தார். மஞ்ச்ரேக்கரின் தரம் தாழ்ந்த விமர்சனத்தால் அவருக்கு கண்டனங்கள் குவிந்தது.
மேலும் படிக்க : Asia Cup IND vs PAK : ஹர்திக், ஜடேஜா அபார பேட்டிங்..! பாகிஸ்தானை பழிதீர்த்த இந்தியா..! கடைசி ஓவரில் திரில் வெற்றி..!
ஆனால், அந்த உலககோப்பையில் ஜடேஜா அரையிறுதியில் தனி ஆளாக இந்திய அணிக்காக போராடினார். இந்திய அணி தோற்றாலும் ஜடேஜாவின் திறமையை அனைவரும் பாராட்டினர். மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித்தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா தோற்ற பிறகு, ஜடேஜாவை இந்திய அணிக்காக களமிறக்கியது தவறு, அவரை ஒரு பேட்ஸ்மேனாக நான் கருத மாட்டேன் என்று மஞ்ச்ரேக்கர் மீண்டும் மட்டம் தட்டி விமர்சித்திருந்தார். மஞ்ச்ரேக்கருக்கு பதிலா விஹாரியை களமிறக்கியிருக்கலாம் என்றும் கூறினார்.
மஞ்ச்ரேக்கர் தொடர்ந்து ஜடேஜாவின் திறமையை குறைத்து மதிப்பிட்டாலும் இந்திய அணியின் நம்பர் 1 ஆல்ரவுண்டர் என்ற பெருமையை ஜடேஜாதான் தற்போது அலங்கரித்து வருகிறார். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று அனைத்திலும் கலக்கி வரும் ஜடேஜா, டெஸ்ட் போட்டிகளில் உலகின் நம்பர் 1 ஆல்ரவுண்டராக ஐ.சி.சி. தரவரிசையில் உள்ளார்.
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 37 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4 சதங்கள், 1 இரட்டை சதம், 9 அரைசதம் உள்பட 2043 ரன்களை குவித்துள்ளார். 74 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1 சதம் 15 அரைசதங்களுடன் 1994 ரன்களை குவித்துள்ளார். 1987ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை அவர் கிரிக்கெட் ஆடியுள்ளார்.
மேலும் படிக்க : IND vs PAK, Asia Cup Win: ஒளியே வழியாக மலையே படியாக..இனிஒரு விதி செய்வோம்.. இந்திய வெற்றியை கொண்டாடும் மக்கள்
மேலும் படிக்க : IND vs PAK: தர்மம் தோற்காதே ஆளும் காவலனே... ஹர்திக் பாண்ட்யாவிற்கு தலை வணங்கிய கார்த்திக்.. வைரல் படம்..