இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜாகீர் கான் ஆகிய இருவரும் சிறுமி ஒருவரின் பந்துவீச்சை பாராட்டியுள்ளனர்.
வைரல் வீடியோ:
இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுலகர் தனது சமூக வலைதளப்பக்கங்களில், வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் சிறுமி ஒருவர் பந்து வீசுவதை பார்த்து அசந்து போன அவர், அச்சிறுமியின் பந்துவீச்சு திறன் உங்களை போல் உள்ளது இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானையும் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: Ruturaj Gaikwad : பத்த வச்சிட்டியே ருது! RCB-ஐ கலாய்த்த சிஎஸ்கே கேப்டன்.. அடுத்த சீசன் சம்பவம் இருக்கு!
இது குறித்து சச்சின் பதிவிட்டுள்ளதாவது, அந்த சிறுமியின் பெயர் சுசிலா மீனா, அவர் பந்து வீசும் திறன் அபாரமாக உள்ளது, சுசிலா மீனாவின் பந்து வீச்சு நீங்கள் பந்து வீசுவது போலவே உள்ளது என்று ஜாகீர் கானை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
ஜாகீர் கான் பதில்:
இதற்கு பதிலளித்த ஜாகீர் கான், நீங்கள் சொல்வது சரி தான், என்னால் இதை ஒத்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை, அச்சிறுமியின் ஏற்கெனவே தனது திறமையை காட்டியுள்ளாற் என்றார் ஜாகீர் கான்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் ஆலோசகராகவும், ஜாகீர் கான் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பணியாற்றினர். அதன் பின் தற்போது சச்சின் மும்பைஇந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக பணியாற்றவுள்ளார். ஜாகீர் கான் இந்த ஆண்டு லக்னோ அணியின் ஆலோசகர் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த சுசீலா மீனா?
ராஜஸ்தான் மாநிலம், பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள தாரியாவத் பகுதியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி சுசீலா மீனா, கிரிக்கெட்டில் உள்ள தனது திறமைகளை சமூக வலைதளங்களின் வாயிலாக ஈர்த்து வருகிறார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான சுசீலாவின் பந்துவீச்சு முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாகீர் கானுடன் மிகவும் ஒத்திருக்கிறது. இவரது வைரலான வீடியோ நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார்.