பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்வில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியை ட்ரோல் செய்துள்ளார். இந்நிலையில், திடீரென ருதுராஜின் மைக் அணைக்கப்பட்டதால், சிஎஸ்கே கேப்டன் அதை ட்ரோல் செய்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது 


RCB vs CSK போட்டிகள் என்பது எப்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது, மேலும் இந்த இரு அணிகளும் களத்தில் மோதிக்கொண்டால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதி கொள்வார்கள் ஐபிஎல் 2024ல், பெங்களூரு அணி சென்னையை பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேற்றியது. இதனால் இரு அணி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களை போட்டு ட்ரோல் செய்து கொண்டனர்.






ட்ரோல் செய்த ருதுராஜ்:


பெங்களூரு இன்ஃபோசிஸ் நேற்று ஏற்பாடு செய்திருந்த INFYusion நிகழ்வின் போது சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கலந்து கொண்டார், அப்போது அவரது மைக் வேலை செய்வதை நிறுத்தியது, மேடையில் இருந்த ஆங்கர் ருதுராஜிடம் மைக்கை அணைத்தது யார் என்று கேட்டபோது, ருதுராஜ் கெய்க்வாய் RCB அணியை கேலி செய்தார். மைக்கை அணைத்தது  RCB ரசிகராக இருக்க வேண்டும் என்றார்.






சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக ருதுராஜின் மைக் அணைக்கப்பட்டது, ஆனால் அவர் RCB ஐ ட்ரோல் செய்த விதம் ஆர்சிபி ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


இதையும் படிங்க: Ashwin: "டேய் தகப்பா என்ன இதெல்லாம்?" அப்பா குற்றச்சாட்டுக்கு அஸ்வின் தந்த விளக்கத்தை பாருங்க!


சென்னை அணி:


ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ள சென்னை அணிக்கு, அடுத்த சீசனிலும் ருதுராஜ் தலைமையில் களமிறங்குகிறது, மறுபுறம் நட்சத்திர வீரர்கள் நிறைந்த ஆர்சிபி இன்னும் ஒரு பட்டத்தை கூட வெல்லவில்லை. இந்த ஆண்டு சீசனுக்கான ஏலத்திற்கு முன்னதாக அவர்கள் ஃபாஃப் டு பிளெசிஸை விடுவித்தனர் மற்றும் பெங்களூர் இன்னும் கேப்டனை அறிவிக்கவில்லை. இதனால் விராட் கோலி மீண்டும் ஆர்சிபி அணியை கேப்டனாக  வழிநடத்தலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.