இந்தியன் பிரீமியர் லீக் போன்று தற்போது மும்பையில் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் என்ற போட்டி தொடர் நடைபெறுகிறது. நேற்று நடந்த தொடக்க விழாவில் ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டன் அமீர் ஹூசைன் லோனை இந்திய அணி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கௌரம் செய்தார். தொடர்ந்து, இந்தியன் ஸ்ட்ரீர் பிரீமியர் லீக்கின் முதல் பந்தை அமீர் எதிர்கொள்ள வேண்டும் என்பது எனது கனவு என்றும் சச்சின் தெரிவித்தார். 


 இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெறுவதற்கு முன்பாக, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் இரு அணிகளாக பிரிந்து நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடினர். அப்போது, சச்சின் டெண்டுல்கரின் மாஸ்டர் லெவன் அணியில் இடம் பெற்றிருந்த அமீர் ஹூசைன் அக்‌ஷய் குமாருக்கு எதிரான போட்டியின் முதல் பந்தை சந்தித்தார். 






இந்த போட்டியின்போது சச்சின் டெண்டுல்கர் அமீரை கவுரவித்தார். அதன்படி, சச்சின் டெண்டுல்கர் அமீரின் ஜெர்சியையும், அமீர் சச்சின் டெண்டுல்கரின் ஜெர்சியையும் அணிந்து விளையாடினார்கள். அந்த நேரத்தில் அமீரின் முழு குடும்பமும் சச்சினின் அழைப்பின் பெயரில் ஸ்டேடியத்திற்கு வந்திருந்தனர். 






ஆட்டம் தொடங்கும் முன், மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் அமீர் ஹூசைன் லோனை மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கட்டிப்பிடித்தார். இதன்போது அக்‌ஷய் குமார், நடிகர் சூர்யா, நடிகர் ராம் சரண் உட்ப ஸ்டேடியத்தில் இருந்த அனைவரும் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். மேலும், அக்‌ஷய் குமார் தலைமையிலான பிளேயர்ஸ் லெவன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கருடன் அமீர் ஹூசைன் ஓபனிங் செய்தார். தற்போது அமீர் ஹூசைன் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


யார் இந்த அமீர் ஹூசைன்..? 


அமீர் தனது 8 வயதில் ஒரு விபத்தில் தனது இரண்டு கைகளையும் இழந்தார். இரண்டு கைகளும் இல்லாவிட்டாலும், ஆமிர் பேட்டிங் செய்யும்போது தோள்பட்டை மற்றும் கழுத்தின் உதவியுடன் பேட்டை பிடித்து பேட்டிங் செய்வார். இது தவிர, அமீர் தனது வலது கால் கொண்டு பந்தும் வீசுவார் என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் 8 வயதில் தனது இரண்டு கைகளையும் இழந்த நிலையிலும், அமீருக்கு நம்பிக்கை குறையாமல், ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறது.