ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (அக்டோபர் 14) குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து முடிந்தது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி.


சோயிப் அக்தர் - சச்சின்:


இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. அதன்படி, கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் எல்லாம் பாகிஸ்தானை தோற்கடித்து இந்திய அணி தான் வெற்றி வாகை சூடி இருக்கிறது. 


இச்சூழலில் நேற்று (அக்டோபர் 14) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.






அதன்படி, அந்த பதிவில், “"நாளை இப்படி ஒரு விஷயத்தை செய்தால் நன்றாக இருக்கும்" என்று கூறி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் விக்கெட்டை வீழ்த்தியது போன்ற புகைப்படம் ஒன்றையும் இணைத்து அந்த பதிவை வெளியிட்டிருந்தார். அதற்கு இந்திய ரசிகர்களிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டார் அக்தர். 


நண்பரே, நண்பரே: 


இதனிடையே, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு  சோயப் அக்தர் வெளியிட்டிருந்த பதிவை மேற்கோள் (Quote) காட்டி சச்சின் டெண்டுல்கர், “என் நண்பரே, அவர்கள் உங்கள் ஆலோசனையைப் பின்பற்றினர் மற்றும் அவர்களின் செயல்திறன் முற்றிலும் சிறப்பாக இருந்தது" என்று கூறினார்.






ஒருவர் மாறி ஒருவர் நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்ட இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. 


இந்நிலையில், சச்சின் சொன்னதை மோற்கோள் காட்டி சோயப் அக்தர், “எனது நண்பரே, நீங்கள் எல்லா காலத்திலும் சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் அதன் மிகப்பெரிய தூதுவர் (ambassador )” என்று கூறியுள்ளார். மேலும், எங்களின் நட்பில் இந்த கேலி அதை மாற்றாது என்றும் நட்புடன் தெரிவித்துள்ளார்.






தற்போது ரசிகர்கள் பலரும் சச்சின் மற்றும் சோயிநண்ப் அக்தர் மைதானத்தில் ஆக்ரோசமாக  விளையாடினாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் என்பதை இந்த பதிவுகள் காட்டுகிறது என்பதை போன்ற கருத்துகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


மேலும் படிக்க: ENG Vs AFG Score LIVE: மிரட்டும் இங்கிலாந்து.. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஃப்கானிஸ்தான்..!


மேலும் படிக்க: Sri lanka Worldcup 2023: பேரிடி..! உலகக் கோப்பையிலிருந்து விலகினார் இலங்கை கேப்டன் தசுன் ஷனகா - காரணம் இதுதான்..!