இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் சென்று கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றனர். இதனால் மூன்று போட்டியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மிகவும் மோசமான தோல்வி அடைந்தது. அத்துடன் தென்னாப்பிரிக்காவில் 7ஆவது முறை டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்துள்ளது. 

 

இந்நிலையில் வழக்கம் போல் இந்தத் தொடரிலும் இந்திய அணி பேட்டிங் மிகவும் மோசமாக அமைந்தது. கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவர் மட்டுமே இந்தத் தொடரில் ஒரு சதம் அடித்தனர். மற்ற வீரர்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. அதிலும் குறிப்பாக புஜாரா,ரஹானே உள்ளிட்ட அனுபவ வீரர்களின் சொதப்பல் இந்திய அணிக்கு பெரிய சிக்கலாக அமைந்தது.  அதேபோல் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய ரோகித் சர்மாவிற்கு பதிலாக வந்த மாயங்க் அகர்வாலும் சரியாக விளையாடவில்லை. இவர்கள் மூன்று பேரும் தொடரின் மொத்த உதிரி ரன்களைவிட குறைவாக அடித்துள்ளனர். 

புஜாரா- 124 ரன்கள்

அகர்வால்-135 ரன்கள்

ரஹானே- 136 ரன்கள்

உதிரிகள்- 136 ரன்கள்

 

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்திய டாப் 5 வீரர்களின் செயல்பாடு:

வீரர் போட்டிகள் ரன்கள் சராசரி
கே.எல்.ராகுல் 3 226 37.67
மாயங்க் அகர்வால் 3 135 22.50
புஜாரா 3 124 20.67
விராட் கோலி 2 161 40.25
ரஹானே 3 136 22.67

 

இவ்வாறு தொடரின் மொத்த செயல்பாடுகளில் இந்த மூன்று பேரின் பேட்டிங் மிகவும் மோசமாக அமைந்தது. அதிலும் தொடரின் மொத்த உதிரி ரன்களைவிட இவர்கள் குறைவாக அடித்தது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்தத் தொடரில் இந்திய அணி ஒரு முறை மட்டுமே 300 ரன்களை கடந்தது. 


தென்னாப்பிரிக்க தொடரில் இந்திய அணி அடித்த ஸ்கோர்கள்:

முதல் டெஸ்ட்:   327 & 174

இரண்டாவது டெஸ்ட்: 202 & 266

மூன்றாவது டெஸ்ட்:  223 & 198

தென்னாப்பிரிக்கா மண்ணில் இதுவரை இந்தியாவின் டெஸ்ட் தொடர் செயல்பாடு:

விளையாடிய தொடர்கள் வெற்றி தோல்வி டிரா
8 0 7 1

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்க மண்ணில் 1992 முதல் 2022 வரை 8 முறை டெஸ்ட்  தொடரில் பங்கேற்று உள்ளது. அவற்றில் 7 முறை தோல்வி அடைந்துள்ளது. 2010-11 தொடரை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: ‛இந்த டீமுக்கு என்ன தான் ஆச்சு... வெளிநாட்டில் சொதப்புவதும்... உள்நாட்டில் பாய்வதும்...’ சுதாரிப்பது எப்போது?