உலகக்கோப்பைத் தொடரில் லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதி வருகின்றன. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
தெ.ஆ - ஆஸ்திரேலியா:
இதையடுத்து, ஆட்டத்தைதொடங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு கேப்டன் பவுமா – குயின்டின் டி காக் நிதானமான தொடக்கத்தை அளித்தனர். பவுமா நிதானமாக ஆட டி காக் அதிரடியாக ஆடினார். அணியின் ஸ்கோர் 108 ரன்களை எட்டியபோது நிதானமாக ஆடிக் கொண்டிருந்த பவுமா ஆட்டமிழந்தார். அவர் மேக்ஸ்வெல் பந்தில் 55 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார்.
அடுத்து வந்த டு சென் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டு சென் சுழற்பந்துவீச்சாளர் ஜம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 30 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 26 ரன்களுக்கு அவுட்டானார். ஒரு முனையில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய விக்கெட் கீப்பர் குயின்டின் டி காக் சதம் அடித்தார்.
டி காக் சதம்:
சதம் அடித்த சிறிது நேரத்திலே அவர் மேக்ஸ்வெல் பந்தில் போல்டானார். மேக்ஸ்வெல் 106 பந்துகளில் 8 பவுண்டரி 5 சிக்ஸருடன் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து அதிரடி வீரர்கள் மார்க்ரம் – கிளாசென் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.
மார்க்ரம் பவுண்டரிகளை விளாசினார். கிளாசென் நிதானமாக ஆடினார். சிறப்பாக ஆடிய மார்க்ரம் அரைசதம் கடந்தார். அரைசதம் கடந்த நிலையில் அவர் மேலும் அதிரடி காட்ட முயற்சித்தபோது ஆட்டமிழந்தார். அவர் 44 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கிளாசென் 27 ரன்களுக்கு 3 பவுண்டரிகளுடன் 29 ரன்களை விளாசினார்.
கடைசியில் டேவிட் மில்லர் – மார்கோ ஜான்சென் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி ரன்களை சேர்க்க முயற்சித்தனர். குறிப்பாக ஜான்சென் அதிரடியாக ஆடினார். இதனால், தென்னாப்பிரிக்க அணி 300 ரன்களை கடந்தது.
312 ரன்கள் இலக்கு:
டேவிட் மில்லர் 13 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 17 ரன்கள் எடுத்தபோதும், ஜான்சென் 22 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், மேக்ஸ்வெல் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர். மேக்ஸ்வெல் மட்டுமே 10 ஓவர்கள் வீசி 34 ரன்களை விட்டுக்கொடுத்து கட்டுக்கோப்பாக வீசினார். ஹேசல்வுட், கேப்டன் கம்மின்ஸ், ஜம்பா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
கடந்த போட்டியில் இந்திய அணியுடன் தோல்வியை தழுவிய ஆஸ்திரேலிய அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லாவிட்டால் புள்ளிப்பட்டியலில் பின்னோக்கி செல்ல வேண்டிய சூழலில் உள்ளது.
மேலும் படிக்க: ABP Southern Rising Summit 2023 LIVE: ”தற்போது உள்ள சினிமாவில் சாதி ஒடுக்குமுறை இல்லை" - நடிகை சுஹாசினி
மேலும் படிக்க: இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ABP Southern Rising Summit 2023 - சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் நம்பர் 1