இந்தியாவின் முக்கிய உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடர் டிசம்பர் 8-ம் தேதி தொடங்கியது. 38 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வருகிறார் ருதுராஜ் கேக்வாட்.  அந்த அணியின் கேப்டனான அவர், பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார். தொடர் ஆரம்பித்து ஆறு தினங்களே ஆன நிலையில், அவர் விளையாடிய ஐந்து போட்டிகளில் 4 சதங்கள் அடித்து அசத்தி இருக்கிறார் ருதுராஜ்.


2021 விஜய் ஹசாரே கோப்பையில் ருதுராஜ்:


vs மத்திய பிரதேசம் - 136 (112) - 14 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்


vs சட்டிஸ்கர் - 154* (143) - 14 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்


vs கேரளா - 124 (129) - 9 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்


vs உத்தரகண்ட் - 21 (18) - 2 பவுண்டரிகள், 1 சிக்சர்கள்


vs சண்டிகர் - 168 (132) - 12 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்






டிசம்பர் 8-ம் தேதி மத்திய பிரதேசம் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும், டிசம்பர் 9-ம் தேதி சட்டிஸ்கர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும், சதங்களை விளாசி இருக்கிறார் ருதுராஜ். இந்த இரண்டு போட்டிகளிலும் மகாராஸ்டிரா அணி வெற்றி பெறுவதற்கு ருது மிக முக்கிய பங்காற்றி இருந்தார். அதனை அடுத்து, கேரளாவுக்கு எதிரான போட்டியில் சதமும், இன்று சண்டிகருக்கு எதிரான போட்டியிலும் சதம் அடித்து அதிரடி காட்டியிருக்கிறார். 


இதன் மூலம், கோலி, ப்ரித்வி ஷா, படிக்கலின் ரெக்கார்டுகளை சமன் செய்திருக்கிறார். 2009-2010 ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் விராட் கோலி 4 சதங்கள் அடித்திருப்பார். விஜய் ஹசாரேவின் ஒரே சீசனில் 4 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அவரை அடுத்து, 2020-2021 சீசனில், ப்ரித்வி ஷா, படிக்கல் ஆகியோர் தலா 4 சதங்களை அடித்திருக்கின்றனர். 


இந்நிலையில், நடப்பு சீசனில் ருதுராஜ் 4 சதங்கள் கடந்து இந்த ரெக்கார்டை சமன் செய்திருக்கிறார். மேலும், 2021-2022 விஜய் ஹசாரே சீசனில் வெறும் 5 இன்னிங்ஸில் 600 ரன்களை கடந்து அசத்தி இருக்கிறார் இந்த சூப்பர் பேட்டர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண