கிரிக்கெட் உலகில் பல நடுவர்கள் பட்டியலில் ரசிகர்களை கவர்ந்து முதலிடத்தில் உள்ளவர் பில்லி பவுடன். ஒவ்வொரு முறையும் பில்லி பவுடன் அவுட் கொடுக்கும் போது அல்லது பவுண்டரி, சிக்ஸ் செய்கை காட்டும் போது நமக்கு ஒரு பெரிய இன்பமாக அமையும். கிரிக்கெட் போட்டியுடன் சேர்ந்து அவருடைய செய்கைகளும் நமக்கு பெரிய விருந்தாக அமையும். 



நியூசிலாந்தைச் சேர்ந்த பில்லி பவுடன் 1995ஆம் ஆண்டு முதல் ஐசிசியின் நடுவராக பணியாற்றி வந்தார். இவர் 2016ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவராக இருந்தார். இவர் 104 டெஸ்ட் போட்டிகள், 259 ஒருநாள் போட்டிகள் மற்றும் 32 டி20 போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ளார்.எப்போதும் அவருடைய செய்கைக்கு பலரும் அடிமையாக இருந்துள்ளனர்.



எவரேனும் ஒருவர் அவுட்டானால் தன்னுடைய ஆல்காட்டி விரலை குட்டியாக மடக்கி அவுட் காமிக்கும் செயலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதேபோல்,  இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரெய்னா பில்லிக்கு பின்னாடி நின்று இவரைப்போல் செய்கை செய்த புகைப்படம் அப்பொழுது இணையத்தை கலக்கியது. 




இந்தநிலையில், அவருக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு இந்தியாவில் உள்ளூர் போட்டியில் நடுவர் ஒருவர் வந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. 


 






இதையடுத்து, பில்லி பவுடனை கிண்டல் செய்யும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்த ஸ்டைலுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க பில்லி பவுடன் என்று நக்கலாய் கேள்வி எழுப்பியுள்ளார். இதைப்பார்த்த சச்சின் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் ரீ-ட்வீட் செய்து வருகின்றனர். 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண