Rohit Sharma: உலகக் கோப்பையுடன் வணக்கம் சொன்ன ஹிட்மேன் ரோஹித் ஷர்மா..வைரல் போஸ்ட்!

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

சாம்பியன் பட்டத்தை வென்ட இந்தியா:

ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டு விளையாடியது. அதன்படி 7 ரன்களில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதோடு இந்த டி20 உலகக் கோப்பையோடு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் ஷர்மா அறிவித்தார். 

Continues below advertisement

ஹிட்மேனின் வைரல் போஸ்ட்:

முன்னதாக நேற்று முதல் சமூக வலைதளங்களை இந்திய கிரிக்கெட் அணி தொடர்பான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் தான் ஆக்கிரமித்து உள்ளது. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற உடன் கேப்டன் ரோஹித் ஷர்மாவிடம் கோப்பை வழங்கப்பட்டது. அப்போது கடந்த ஆண்டு நடைபெற்ற ஃபிஃபா  கால்பந்து போட்டியின் போது சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி கேட் வாக் போல் நடந்து சென்று கோப்பையை வாங்குவார். இதைப்போல தான் நேற்று ரோஹித் சர்மாவும் கோப்பை வாங்கினார்.

இதை ஃபிஃபா தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தான் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது டி20 உலகக் கோப்பை கோப்பைக்கு அருகில் அவர் படுக்கையில் எழுந்திருக்கும் புகைப்படத்தை  தான் இன்ஸ்டாகிரமில் பதிவு செய்துள்ளர். இதனைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்துடன் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!

மேலும் படிக்க: IND vs SA Final T20 2024: பாண்டியா வீசிய கடைசி ஓவர்.. சூர்யகுமார் செய்த செயல்! ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்த சம்பவம்!

 

Continues below advertisement