சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி (BGT) 2024-25ல் ஆஸ்திரேலியாவிடம் 3-1 என்ற கணக்கில் தோல்வியடைந்த பின்னர், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா அணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2023-25 இறுதி போட்டியில் தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா அணி வெளியேறியதால், ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி தீவிர விமர்சனத்துக்கு உள்ளது. மேலும், ரோகித்தின் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக இந்திய அணியில் ரோகித்தின் இடம் கேள்விக்குறியாகி வருகிறது,.
ரோகித் பெர்த்தில் நடந்த முதல் IND vs AUS டெஸ்டில் தனது குழந்தை பிறந்ததற்காக தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டார், மேலும் ஐந்தாவது டெஸ்டில் தானாக முன்வந்து வெளியேறினார், அவரது மோசமான பார்முக்கு மத்தியில் மற்றொரு வீரருக்கு வாய்ப்பளித்தார்.
இதையும் படிங்க: Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
பார்டர் கவாஸ்கர் தொடரில் ரோகித்தின் கேப்டன்சியின் கீழ் இந்தியா தடுமாறிய முதல் முறை அல்ல, முன்னதாக, BGT க்கு முன்னதாக இந்திய அணி நியூசிலாந்திற்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு ஒயிட்வாஷ் ஆனது. இந்திய அணி கடைசியாக 2000 இல் இப்படி சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் ஆனது.
டெஸ்ட் தரவரிசை:
தற்போது ஐசிசி டெஸ்ட் அணி தரவரிசையில் ஆஸ்திரேலியா 126 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்கா 112 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியா 109 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்தியா அணியின் தற்போதைய தோல்விகள், ரோகித்தின் கேப்டன்சியின் இந்திய அணியின் ரெக்கார்ட்டுகளையும், 2014 முதல் 2022 வரை விராட் கோலியின் கேப்டன்சியின் கீழ் இந்திய அணியின் ரெக்கார்டுகளையும் ஓப்பிட்டு இந்த தொகுப்பில் காணலாம்.
ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கேப்டன் சாதனை:
போட்டிகள்: 24
வெற்றி: 12
இன்னிங்ஸ்: 42
தோல்வி: 9
டிரா: 3
டை: 0
வெற்றி சதவீதம்: 50%
விராட்டின் தலைமையின் கீழ், 68 போட்டிகளில் 40 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது மற்றும் 11 போட்டிகளில் டிரா செய்து 17 போட்டிகளில் தோல்வியடைந்தது, 58.82 சதவீத வெற்றியைப் பெற்றது. 2018-2024 வரை தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக ஐசிசி டெஸ்ட் அணி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது இந்திய அணி.
வெளிநாடுகளில் விராட் கேப்டனாக இருந்த 37 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 16ல் வெற்றியும், 15ல் தோல்வியும் அடைந்தது.
இந்திய டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி (2014-2022):
போட்டிகள்: 68
வெற்றி: 40
தோல்வி: 17
டை: 0
டிரா: 11
முடிவு இல்லை: 0
வெற்றி/தோல்வி விகிதம்: 2.35
வெற்றி சதவீதம்: 58.82%
தோல்வி சதவீதம்: 25%
இல்லை முடிவு சதவீதம்: 0%
முடிவு சதவீதம்: 70.
இந்தியா மண்ணில் கோலி சாதனைகள்
போட்டிகள்: 31
வெற்றி: 24
தோல்வி: 2
சமநிலை: 0
டிரா: 5
முடிவு இல்லை: 0
வெற்றி சதவீதம்: 77.42%
தோல்வி சதவீதம்: 6.45%
வெளிநாட்டு தொடர்களில்
போட்டிகள்: 37
வெற்றி: 16
தோல்வி: 15
சமநிலை: 0
டிரா: 6
முடிவு இல்லை: 0
வெற்றி சதவீதம்: 43.24%
தோல்வி சதவீதம்: 40.54%