தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடரில் தோல்விக்கு பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக களமிறங்க உள்ளது. மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இந்தியா அணி விளையாட உள்ளது. முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுள்ளது. முதல் ஒருநாள் போட்டி வரும் 6ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ள முதல் ஒருநாள் போட்டி இந்தியாவின் 1000ஆவது ஒருநாள் போட்டியாகும். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 1000 ஒருநாள் போட்டிகள் விளையாடிய முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைக்க உள்ளது. இதுவரை இந்திய அணி இதுவரை 999 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அதில் 518 வெற்றியும், 431 தோல்வியும் பெற்றுள்ளது. 9 போட்டிகள் டையில் முடிவடைந்துள்ளன. 41 போட்டிகள் முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டுள்ளன. 

அதிக சர்வதேச ஒருநாள் போட்டிகள் விளையாடிய அணிகள்:

அணி ஒருநாள் போட்டிகள் வெற்றி தோல்வி டை முடிவில்லை
இந்தியா 999 518 431 9 41
ஆஸ்திரேலியா 958 581 334 9 34
பாகிஸ்தான் 936 490 417 9 20

 

இந்திய அணியை முக்கியமான ஒருநாள் போட்டியில் வழிநடத்திய கேப்டன்கள்: 

ஒருநாள் போட்டி வழிநடத்திய இந்திய கேப்டன்கள்
100 கபில்தேவ்
200 முகமது அசாரூதின்
300 சச்சின் டெண்டுல்கர்
400 அசாரூதின்
500 சவுரவ் கங்குலி
600 வீரேந்திர சேவாக்
700 மகேந்திர சிங் தோனி
800 மகேந்திர சிங் தோனி
900 மகேந்திர சிங் தோனி

இந்தப் பட்டியலில் 1000ஆவது ஒருநாள் போட்டியை ரோகித் சர்மா வரும் 6ஆம் தேதி வழிநடத்தி இணைய உள்ளார். இதுவரை ஒருநாள் போட்டிகளில் கேப்டன் ரோகித் சர்மா அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். இதுவரைவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இவர் 31 இன்னிங்ஸில் 1523 ரன்கள் அடித்துள்ளார். அத்துடன் 3 சதம் மற்றும் 11 அரைசதம் விளாசியுள்ளார்.  எனவே இந்தியாவின் 1000ஆவது ஒருநாள் போட்டியில் கேப்டனாக களமிறங்கி ரோகித் சர்மா அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஹிட் அடித்த ஹிட்மேன்..ரோகித் சர்மாவின் பார்ட்னர்ஷிப் !