தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடரில் தோல்விக்கு பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக களமிறங்க உள்ளது. மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இந்தியா அணி விளையாட உள்ளது. முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுள்ளது. முதல் ஒருநாள் போட்டி வரும் 6ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் மீண்டும் வரும் வாரம் முதல் பயோ பபுளில் இணைய உள்ளனர்.


இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தன்னுடைய புதிய லுக் தொடர்பாக ஒரு ட்விட்டர் பதிவை செய்துள்ளார். அதில் ஒரு வாசகமும் சேர்த்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,”எப்போதும் நீயே உனக்கு போட்டி” என்பதை குறிக்கும் வகையில் வாசகத்தை எழுதியுள்ளார். மேலும் கண்ணாடியில் இவருடைய முகத்தை பார்ப்பது போல் ஒரு படத்தையும் பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவு வேகமாக வைரலாகி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பாக இந்தப் பதிவு பெரும் வரவேற்பை பெற தொடங்கியுள்ளது. 






இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். அவருக்கு அடுத்து யார் இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருப்பார் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் அணிக்கும் கேப்டனாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இந்திய அணியின் ரன் மெஷினாக கருதப்படும் விராட் கோலி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச போட்டிகளில் சதம் அடிக்கவில்லை. கடைசியாக 2019ஆம் ஆண்டு ஈடன் கார்டனில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார்.  அதன்பின்னர் விளையாடிய ஒரு டெஸ்ட் போட்டியில் கூட சதம் அடிக்கவில்லை. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கடைசியாக 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார். ஆகவே வரும் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் இவர் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி 70 சதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Dhoni New Video: உனக்கென்ன வேணும் சொல்லு... தோனி மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரல்..!