இந்திய கிரிக்கெட் அணி தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விறுவிறுப்பான அரையிறுதி சுற்று:
கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி அரையிறுதி சுற்றில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ளன. அரையிறுதி சுற்றின் முதல் போட்டி நாளை (ஜூன் 27) நடைபெறுகிறது. இதில் ரஷீத் கான் தலைமையிலான ஆப்கானிதான் மற்றும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணிகள் விளையாட உள்ளன.
அதேபோல் இந்திய அணி விளையாடும் அரையிறுதி சுற்றின் இரண்டாவது போட்டியும் நாளை தான் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணி ஜ்ஜுன் 29 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடும்.
வைரல் வீடியோ:
இந்நிலையில் தான் இந்திய அணி தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய பிறகு இந்திய அணி அரையிறுதி போட்டியை கயானாவில் விளையாட உள்ளது.
இதற்கான பயணத்தை இந்திய அணி விமானம் மூலம் மேற்கொண்டுள்ளது. இந்த வீடியோவை பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த வீடியோவில் கயானா சென்ற இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது . இதனை பார்த்த ரசிகர்கள் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
அரையிறுதி போட்டியில் மழை வந்தால் என்ன நடக்கும்?
முதல் அரையிறுதி போட்டிக்கு ரிசர்வ் நாள் இருக்கும் சூழலில் இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு ரிசர்வ் நாள் இல்லை. மழையால் இந்த போட்டியில் தாமதம் ஏற்பட்டால் 250 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்கப்படும்.
ஒரு வேளை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ள போட்டியில் மழை காரணமாக கைவிடப்பட்டால் சூப்பர் 8 சுற்றில் இந்தியாவின் ரன்ரேட் சிறந்த நிலையில் உள்ளதால் நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி நுழையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Frank Duckworth: கிரிக்கெட் உலகில் தவிர்க்கமுடியாத டக்வர்த் லூயிஸ் முறை - கண்டுபிடித்த ஃப்ராங்க் டக்வர்த் காலமானார்
மேலும் படிக்க: Paris 2024 Olympics: ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் களம்.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு..!