ஐசிசி ஒருநாள் தரவரிசையில் மூன்று வாரங்களாக முதலிடத்தைப் பிடித்த ரோகித் தற்போது ஒரு இடம் சரிந்து இரண்டு இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

Continues below advertisement


ஐசிசி தரவரிசை பட்டியல்


 ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியல் நேற்று(19-11-25) வெளியிடப்பட்டது. தரவரிசையில் மூன்று வாரங்களாக முதலிடத்தைப் பிடித்த பிறகு,  ரோஹித் சர்மா மீண்டும் சரிந்துள்ளார். நியூசிலாந்தின்  பேட்ஸ்மேனான டேரில் மிட்செல் முதலிடத்தை இடம்பிடித்துள்ளார். மிட்செல் 782 புள்ளிகளுடன் முதலிடத்தை எட்டியுள்ளார், அதே நேரத்தில் ரோஹித் 781 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.


அசத்திய மிட்செல்:


மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மிட்செல் தனது ஏழாவது சதத்தை அடித்தார். அவர் 118 பந்துகளில் 119 ரன்கள் எடுத்தார், அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும். இந்த சதம் அவருக்கு தரவரிசையில் முன்னேற உதவியது. சுவாரஸ்யமாக, இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான அணியில் அவர் சேர்க்கப்படவில்லை. ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை எட்டிய இரண்டாவது நியூசிலாந்து பேட்ஸ்மேன் மிட்செல் ஆவார். முன்னதாக, 1979 ஆம் ஆண்டு பட்டியலில் க்ளென் டர்னர் முதலிடத்தை அடைந்தார்.


முதலிடத்தை இழந்த ரோஹித் சர்மா


ரோஹித்துக்கும் மிட்சலுக்கும் இடையே 1 புள்ளி வித்தியாசம் மட்டுமே உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காட்டிய ஃபார்மை ரோஹித் தக்க வைத்துக் கொண்டால், அவர் எளிதாக முதலிடத்தை மீண்டும் பெற முடியும். 


டாப் 10-ல் முதல் மூன்று


முதல் 10 இடங்களில் ரோஹித்தை தவிர, மற்ற மூன்று இந்திய பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றுள்ளதால், முதல் 10 பட்டியலில் இன்னும் இந்திய அணியின் ஆதிக்கம் உள்ளது. ஷுப்மான் கில் நான்காவது இடத்திலும், விராட் கோலி ஐந்தாவது இடத்திலும், ஷ்ரேயாஸ் ஐயர் எட்டாவது இடத்திலும் உள்ளனர். -


டெஸ்ட் மற்றும் டி20 தரவரிசையில் இந்திய வீரர்கள் முதலிடம்


பந்து வீச்சாளர்களைப் பற்றிப் பார்க்கையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியின் ஆதிக்கம் இந்த வாரமும் தொடர்ந்தது. டெஸ்ட் தரவரிசையில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஒருநாள் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் முதலிடத்தில் உள்ளார்.


பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களும் முன்னேற்றம்...


இலங்கை-பாகிஸ்தான் தொடருக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்களும் தங்கள் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். முகமது ரிஸ்வான் ஐந்து இடங்கள் முன்னேறி 22வது இடத்தைப் பிடித்துள்ளார், அதே நேரத்தில் ஃபகார் ஜமான் 26வது இடத்தைப் பிடித்துள்ளார்.


2023 ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இதே நவம்பர் 19 ஆம் தேதி ரோகித் சர்மா தலைமயில் இந்திய அணி கோப்பையை இழந்தது அதே போல் இந்த ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி ரோகித் நம்பர் ஒரு நாள் பேட்ஸ்மேன் இடத்தில் இருந்து சரிந்துள்ளார்.