ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவின் சாதனை மற்றும் புள்ளிவிவரங்களை இங்கே காணலாம்.


 


ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024:



ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஜூன் 1 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள இந்த போட்டிகளில் மொத்தம் 20 நாடுகள் விளையாடுகின்றன. இதில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி ஜூன் 9 ஆம் தேதி நடக்க உள்ளது.


ஹிட்மேன் ரோஹித் சர்மாவின் சாதனைகள்:


ஹிட்மேன் ரோஹித் சர்மா தலைமையில் தான் இந்திய அணி இந்த முறை விளையாட இருக்கிறது. இந்நிலையில் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவின் சாதனை மற்றும் புள்ளிவிவரங்களை இங்கே காணலாம்:


டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா இதுவரை 36 இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கிறார். இதில், 127.88 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 34.39 சராசரியுடன் 963 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ரோஹித் சர்மா மொத்தம் 9 அரைசதங்கள் விளாசி உள்ளார். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையும் இவர் வசம் தான் இருக்கிறது. 


டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அணிக்காக அதிக ரன்கள் எடுத்த பேட்டர்கள் பட்டியலில் 965 ரன்கள் எடுத்த கிறிஸ் கெய்லை முந்துவதற்கு ரோஹித் சர்மாவுக்கு இன்னும் மூன்று ரன்கள் மட்டுமே தேவை. அதேபோல் டி20 உலகக் கோப்பையில் 1016 ரன்கள் எடுத்த இலங்கை வீரர் மஹேல ஜெயவர்த்தனவை முறியடிக்க ரோஹித் சர்மாவிற்கு இன்னும் 54 ரன்கள் மட்டுமே தேவை படுகிறது. 


அதேநேரம் ஒரே பதிப்பில் டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி வைத்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் 319 ரன்களை எடுத்திருக்கிறார். அதேபோல் ஐந்து T20 உலகக் கோப்பை பதிப்புகளில் 1141 ரன்கள் எடுத்துள்ளார் விராட் கோலி.


டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள்:


விராட் கோலி - 1141 ரன்கள், 


மஹேல ஜெயவர்த்தனே - 1016 ரன்கள், 


கிறிஸ் கெய்ல் - 965 ரன்கள்,


ரோஹித் சர்மா - 963 ரன்கள், 


திலகரத்னே தில்ஷன் - 897 ரன்கள்.


ஐசிசி டி 20 உலகக் கோப்பை போட்டியின் எட்டு பதிப்புகளிலும் விளையாடிய ரோஹித் சர்மா, டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் (ஒட்டுமொத்தமாக இரண்டாவது அதிகபட்சம்) என்ற சாதனையைப் படைத்துள்ளார்


 டி20 உலகக் கோப்பை பதிப்புகளில் இந்தியாவுக்காக 35 சிக்சர்களை அடித்ததன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார்.  மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல் 31 இன்னிங்ஸில் 63 சிக்ஸர்களுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார்.


ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவின் சாதனை:


விளையாடிய போட்டிகள்: 36


மொத்த ரன்கள்: 963


சராசரி : 34.39


ஸ்ட்ரைக்-ரேட்: 127.16


அதிகபட்ச மதிப்பெண்: 79*


அரைசதங்கள் : 9


சிக்ஸர்கள் : 35 ( டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டாவது அதிகபட்சம் )