டி20யில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்?


இந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரம் டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் ஷர்மா ஓய்வு பெற்றதற்கு அவரது வயது மூப்பு தான் காரணம் என்று கூறப்பட்டது.


இச்சூழலில் தான் உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு டி20 போட்டியில் இருந்து விலகியது தான் சரியானது என்று ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்ஸர் ஜிதேந்திர சௌஸ்கியின் யூடியூப் சேனலான FITTR இல் பேசிய ரோஹித் ஷர்மா,"என்னால் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் நன்றாக விளையாட முடியும். ஆனால் ஓய்வு பெறுவதற்கான நேரம் அது தான். அதற்கு முக்கிய காரணம் இளம் தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும். அதற்கான வாய்ப்பை அவர்கள் பெற வேண்டும்.


ஃபிட்னஸ் உங்க மனசுல இருக்கு:


நான் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதற்கு ஒரே காரணம், எனக்கு நேரம் கிடைத்ததுதான். நான் டி20 போட்டிகளை விளையாடி மகிழ்ந்தேன். நான் 17 வருடங்கள் விளையாடினேன். நாங்கள் உலகக் கோப்பையை வென்றோம், 'சரி. மற்ற விஷயங்களைக் கவனிக்க வேண்டிய நேரம் இது. இந்தியாவுக்காக சிறப்பாக செயல்படக்கூடிய பல திறமையான வீரர்கள் உள்ளனர். அதுதான் சரியான நேரம் என்று உணர்ந்தேன். இந்தியாவுக்காக மூன்று வடிவங்களிலும் என்னால் இன்னும் எளிதாக விளையாட முடியும்.


அதனாலதான் சொன்னேன், ஃபிட்னஸ் உங்க மனசுல இருக்கு. நான் தன்னம்பிக்கை கொண்டவன். நான் தேவைப்படும்போது என் மனதைக் கட்டுப்படுத்த முடியும். சில நேரங்களில் இது எளிதானது அல்ல, ஆனால் பெரும்பாலான நேரங்களில் என்னால் அதை செய்ய முடியும்" என்று கூறினார். தொடர்ந்து பேசிய ரோஹித் ஷர்மா,"நான் இன்னும் இளமையாக இருக்கிறேன்.


17 வருடங்கள் விளையாடி, இந்தியாவுக்காக இப்போது 500 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிஉள்ளேன். உலகெங்கிலும் உள்ள பல கிரிக்கெட் வீரர்கள் அதைச் செய்யவில்லை. இறுதியில், எங்கள் வேலை விளையாட்டுக்கு 100% தயாராக இருக்க வேண்டும்"என்று கூறினார் ரோஹித் ஷர்மா