அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்வதற்காக வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது.  இதனால், அரையிறுதியில் அணியை வழிநடத்துவாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


ஒரு வேளை அவர் ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் கே.எல்.ராகுல் அணியை வழிநடத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  


எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம் நவம்பர் 9ம் தேதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.


இந்த ஆட்டத்தில் நியூசிலாந்தும், பாகிஸ்தானும் மோதுகிறது. நவம்பர் 10ம் தேதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் சந்திக்கிறது. முதலாவது அரையிறுதி சிட்னி மைதானத்திலும், இரண்டாவது அரையிறுதி  அடிலெய்டு மைதானத்திலும் நடைபெறுகிறது.


Suryakumar Yadav T20 Record: ஓராண்டில் 1000 ரன்கள்..! ரிஸ்வானை விட சூர்யகுமார்யாதவ்தான் பெஸ்ட்..! டேட்டா ரிசல்ட்..


சூப்பர் 12 குரூப் 1 பிரிவில் இடம்பெற்ற உலகக் கோப்பையை நடத்தும் அணியும் நடப்பு சாம்பியனுமான ஆஸ்திரேலியா வெளியேறியது. இலங்கை,  அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய பிற அணிகளும் வெளியேறின. அந்தச் சுற்றிலிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. சூப்பர் 12 குரூப் 2 பிரிவில் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் வெளியேறின.


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


முனைப்பு காட்டும் அணிகள்: 


நியூசிலாந்து அணி இதுவரை ஒரு முறை கூட டி20 உலகக் கோப்பையை முத்தமிடவில்லை. இதனால், இந்த முறை எப்படியாவது உலகக் கோப்பையைக் கைப்பற்ற அந்த அணி வரிந்துகட்டும். முதல் டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. 






அரையிறுதியில் ஜெயிக்கும் அணிகள் நவம்பர் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் சந்திக்கும். நியூசிலாந்தும், இந்தியாவும் இறுதி ஆட்டத்தில் மோதும் என்றும் கிரிக்கெட் விமர்சர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், கிரிக்கெட்டில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் எந்தெந்த அணிகள் இறுதி ஆட்டத்தில் சந்திப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






இதனிடையே, ரோகித் சர்மாவுக்கு லேசான காயம் தான் என்றும் ரசிகர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் என்றும் டுவிட்டரில் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது.