உலகக் கோப்பை சாம்பியன்ஸ்:
கடந்த ஜூன் 29 ஆம் தேதி நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை 2 வது முறையாக வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் நேற்று நாடு திரும்பிய இந்திய அணி வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதனைத்தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடினார்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 5) தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
வைரல் வீடியோ:
அதாவது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவிடம் பிரதமர் உலகக் கோப்பையை வாங்கும் போது அவர் நடந்து வந்த விதம் குறித்து பிரதமர் மோடி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள ரோஹித் ஷர்மா கோப்பையை பெறுவதற்காக அணி வீரர்கள் என்னை வேகமாக நடக்க வேண்டாம் என்றார்கள்.
அதனால் தான் நான் வித்தியாசமாக மெதுவாக நடந்து கோப்பையை வாங்கினேன் என்றார். அப்போது இது வழக்கமாக குறும்பு செய்யும் யுஸ்வேந்திர சாஹல்தானா என்று பிரதமர் மோடி வேடிக்கையாக கேட்டார். இது அங்கிருந்த இந்திய அணி வீரர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க: Hardik Pandya: ”கம்பேக்னா இப்படி இருக்கனும்” - வான்கடேவில் முழங்கிய ஒற்றை பெயர் - திகைத்துப் போன ஹர்திக் பாண்ட்யா
மேலும் படிக்க: Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!